தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - etv bharat

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Aug 4, 2021, 7:55 PM IST

1 குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் - ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடக்கமா?

குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை சுதந்திர தினத்தன்று வெளியிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 பக்தர்களின்றி நடைபெற்ற காந்திமதி அம்பாள் வளைகாப்பு நிகழ்ச்சி

கரோனா பரவல் காரணமாக நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வளைகாப்பு நிகழ்ச்சி பக்தர்களின்றி நடைபெற்றது.

3 அங்கன்வாடி மையங்கள் திறக்க முடிவு - தமிழ்நாடு அரசு உறுதி

மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்காக அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

4 ஆட்டோ கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர் உயிரிழப்பு

திருப்பத்தூரில் சாலையில் சென்ற ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

5 கரோனா தடுப்பு நடவடிக்கை - ஆசிரியர்கள் துண்டுப் பிரசுரம் விநியோகம்

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

6 உத்தரகண்டில் நிலநடுக்க செயலி அறிமுகம்!

நாட்டிலேயே முதல்முறையாக உத்தரகண்டில் நிலநடுக்க செயலி (உத்தரகண்ட் பூகம்ப எச்சரிக்கை) அறிமுகப்படுத்தப்பட்டது.

7 பெகாசஸ் விவகாரம் - 6 திருணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக திருணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

8 ஹைதராபாத் வந்தடைந்த பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியா திரும்பிய பிறகு, இன்று டெல்லியில் இருந்து ஷாம்ஷாபாத் விமான நிலையம் வந்தடைந்த பி.வி.சிந்துவுக்கு, தெலங்கானா அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

9 புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாள் - ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் 71 ஆவது பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பேனர் வைத்தும் கொண்டாடி வருகின்றனர்.

10 தாய்மார்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் தாய்மார்கள், தயக்கமோ அச்சமோ இல்லாமல் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details