தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணிச் செய்தி சுருக்கம் Top 10 news @ 7 PM

ஈடிவி பாரத்தின் 7 மணிச் செய்தி சுருக்கம்

Top 10 news @ 7 PM
Top 10 news @ 7 PM

By

Published : Jul 15, 2021, 7:07 PM IST

1.மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா? நாளை ஆலோசனை

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முக்கிய அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.


2.திமுகவின் தலையீடு அதிகமாக இருக்கிறது: ஓபிஎஸ்

அனைத்து மாட்டங்களிலும் திமுகவின் தலையீடு அதிகம் இருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

3.முதலமைச்சர் ஸ்டாலின் வாகனம் முன்பு அமர்ந்து போராடிய நபரால் பரபரப்பு

தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வாகனம் முன்பு அமர்ந்து தர்ணா போரட்டத்தில் ஈடுபட்ட நபரால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

4.கீழடி: அகரம் அகழாய்வில் மற்றொரு உறைகிணறு!

கீழடி அருகே உள்ள அகரம் அகழாய்வில் புதிய உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது. மூன்று அடுக்குகள் வெளியே தென்படத் தொடங்கியுள்ள நிலையில், மேலும் அவ்விடத்தில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

5.ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டேவியாவை சந்தித்த மா.சுப்பிரமணியன் சந்திப்பு!

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டேவியாவை இன்று (ஜூலை 15) டெல்லியில் சந்தித்தார்.

6.'நீட் விவகாரத்தில் திமுக ஏமாற்றத்தை பரிசாக அளித்துள்ளது' - ஆர்.பி.உதயகுமார் சாடல்

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மாணவர்களுக்கு ஏமாற்றத்தை முதல் பரிசாக அளித்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

7.டிசம்பர் மாதத்திற்குள் அதிமுக உட்கட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம்

அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என அக்கட்சி உறுதி அளித்திருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8.சரக்கு போதும்;சைடிஷ் வேண்டாம் - குரங்கு அடித்த லூட்டி

மதுபானக் கடையில் புகுந்த குரங்கு ஒன்று தானாகவே பாட்டிலைத் திறந்து மது குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

9.கேரளாவைத் தொடர்ந்து மிரட்டும் ஜிகா வைரஸ்

திருவனந்தபுரம் அருகே உள்ள ஆனையரா பகுதியில் மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

10.பிரமாண்டமாக தயாராகும் ஆர்ஆர்ஆர் - மேக்கிங் வீடியோ வெளியீடு

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் பிரமாண்ட மேக்கிங் வீடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details