தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 7 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 7 PM - top 10 news tamil

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்திச் சுருக்கம்...

7 PM
7 PM

By

Published : Apr 21, 2021, 7:03 PM IST

1. படுக்கை இல்லை, ஆக்சிஜன் இல்லை அழைத்தால் பிரதமர் இல்லை- கமல்

மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. ஆக்ஸிஜன் இல்லை. ரெம்டெசிவிர் மருந்து இல்லை. தடுப்பூசிகள் இல்லை. ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

2.5 நாட்கள் ஓய்விற்குப் பிறகு சென்னை திரும்பும் ஸ்டாலின்

திண்டுக்கல்: தேர்தல் முடிவடைந்த பிறகு ஓய்விற்காக குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்,ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்று சென்னை புறப்பட்டார்.

3.ஊரடங்கு எதிரொலி : புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை : ஊரடங்கு காரணமாக புறநகர் ரயில் சேவையில் ரயில்வே கோட்டம், சில மாற்றங்களை செய்துள்ளது.

4.ஸ்வாப் இல்லை, ரத்தப் பரிசோதனை இல்லை... ஆனால் 2 நிமிடங்களில் துல்லிய கரோனா பரிசோதனை!

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பை 2 நிமிடங்களில் கண்டறியும் வகையில் புதிய வகையிலான "கேஜே கோவிட் ட்ராக்கர் "கருவியை சென்னையில் உள்ள தனியார் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

5.இரவு ஊரடங்கால் அரசு விரைவுப் பேருந்து சேவை பாதிப்பு

இரவு ஊரடங்கால் அரசு விரைவுப் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை செயலர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

6.கரோனா அறிகுறிகள் தென்படவில்லையா? அலட்சியமாக இருக்காதீர்கள்!

ஜலதோஷம், இருமல்,காய்ச்சல் போன்ற அறிகுறி தென்பட்டால் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

7. நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான ஜி.வி.பிரகாஷ் பட அப்டேட்

சென்னை: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

8. அரக்கோணம் இரட்டைக் கொலை: மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்-திருமாவளவன்!

அரக்கோணம் இரட்டைக் கொலை தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வு துறை விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

9.பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் ஒத்திவைப்பு

சென்னை: மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

10.IPL 2021 PBKS vs SRH: பஞ்சாபை பணியவைத்த ஹைதராபாத்; 121 ரன்கள் இலக்கு

ஐபிஎல் தொடரின் 14ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 120 ரன்களை எடுத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details