தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 PM - latest news

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 7 pm
7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 PM

By

Published : Mar 20, 2021, 6:42 PM IST

புதுச்சேரியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு குறித்து பாஜக குற்றப்பத்திரிகை வெளியீடு

புதுச்சேரியை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு குறித்த 'குற்றப்பத்திரிகை' என்ற புத்தகத்தை அம்மாநில பாஜகவினர் வெளியிட்டுள்ளனர்.

அஸ்ஸாமில் 6 இடங்களில் பிரியங்கா காந்தி பரப்புரை!

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அஸ்ஸாமில் ஆறு இடங்களில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

களத்தில் இறங்கும் நாடாளுமன்றக் குழு: காஷ்மீர் நிலவரம் குறித்து ஆய்வு!

காஷ்மீருக்குச் செல்லவுள்ள எம்பி சிராக் பாஸ்வான் தலைமையிலான நாடாளுமன்றக் குழு, அங்கு நிலவும் சூழல் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

கரோனா இரண்டாம் அலை: 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை!

வருகின்ற 22ஆம் தேதிமுதல் மறு உத்தரவு வரும் வரை 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

'வெல்லப்போவது இரட்டை இலைதான்; அதுவும் அதிக வாக்கு வித்தியாசத்தில்...!'

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு, எதிர்த்துப் போட்டியிடுவோர் சும்மா படம் மட்டுமே காட்டுவார்கள், வெல்லப்போவது இரட்டை இலைதான் எனத் தெரிவித்தார்.

அதிமுக அரசை காப்பாற்றியதே பாஜகதான்! - வானதி சீனிவாசன் பேச்சு

தமிழ்நாடு அரசை காப்பாற்றியது பாஜகதான் என கோவையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கோவை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த ஆணின் உறுப்பைத் துண்டித்த பெண்!

பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த திருடனின் ஆணுறுப்பை பெண் ஒருவர் துண்டித்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

அச்சகத் தொழிலாளி குத்திக்கொலை: சிசிடிவி கொண்டு விசாரணை!

கோவில்பட்டியில் அச்சகத் தொழிலாளி அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக்கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த இடத்திலிருந்த கண்காணிப்புப் படக்கருவி பதிவுகளை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஒஎல்இடி டிஸ்பிளேவுடன் வரும் ஆப்பிள் 'ஐபாட் ஏர்' சாதனம்

ஆப்பிள் நிறுவனம் வரும் 2022இல் ஒஎல்இடி டிஸ்பிளே வசதிகொண்ட 'ஐபாட் ஏர்' சாதனத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கரோனா உறுதி!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details