தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @ 7 pm
Top 10 news @ 7 pm

By

Published : Sep 30, 2020, 7:03 PM IST

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5,659 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 659 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 97 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிந்துள்ளனர்.

மறைந்த எஸ்பிபிக்கு குடும்பத்தார், நண்பர்கள் சார்பில் நடைபெறும் நினைவஞ்சலி நிகழ்ச்சி!

மறைந்த பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு, அவரது குடும்பத்தார், நண்பர்கள் சார்பில் நினைவஞ்சலி செலுத்துகின்றனர். அதன் நேரலையை வழங்குகிறது ஈடிவி பாரத் தமிழ்!

அரசு விழிப்புணர்வு ஓவியத்தை அழித்து திருமாவளவனின் ஓவியத்தை வரைந்த ஓவியர் கைது

அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சொந்தமான சுவரில் அனுமதியின்றி அரசு விழிப்புணர்வு ஓவியங்களை அழித்துவிட்டு திருமாவளவனின் ஓவியத்தை வரைந்த ஓவியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் உ.பி.யில் கைது?

உயிரிழந்த ஹத்ராஸ் பட்டியலின பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை உத்தரப் பிரதேச காவல் துறையினர் தடுத்துவைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

'பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு, அரசு இயந்திரத்தின் மீது கேள்வி எழுப்புகிறது' - டி.ராஜா

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு அரசு இயந்திரத்தின் மீதும், சிபிஐ போன்ற அரசு நிறுவனத்தின் மீதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, ஈடிவி பாரத் ஊடகத்துக்கு வழங்கியுள்ள பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக ராஜேஷ் தாஸ் நியமனம் - சர்ச்சை

சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை கையாளத் தெரியவில்லை என பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான ராஜேஷ் தாஸ் அப்பிரிவிற்கே ஏடிஜிபி ஆக நியமிக்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரியில் கனிம வளங்களை எடுக்க அறிவித்த டெண்டருக்கு நீதிமன்றம் தடை!

தர்மபுரி மாவட்டத்தில் காப்பர் உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்கும் டெண்டரை இறுதி செய்ய தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை மெட்ரோவில் காலால் இயக்கும் லிஃப்ட் வசதி அறிமுகம்

கரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் லிஃப்ட்கள், கழிவறைக் குழாய்கள் ஆகியற்றை கால்களால் இயக்கும் வசதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

நடிகர் விஷாலின் 'சக்ரா' படம் ஓடிடி-யில் வருமா?: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

நடிகர் விஷாலின் "சக்ரா" படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் நடவடிக்கையை நிறுத்திவைக்க பிறப்பித்த உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்ற டிரைடெண்ட் ஆர்ட்ஸ் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

எல்பிஎல் தொடரை ஒத்திவைத்த எஸ்சிபி.,!

வீரர்களின் தனிமைப்படுத்துதல் காலத்தைக் கருத்தில் கொண்டு லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரை ஒருவாரம் ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் (எஸ்சிபி) அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details