தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - 7 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @ 7 pm
Top 10 news @ 7 pm

By

Published : Sep 23, 2020, 7:06 PM IST

  • 'தரவில்லாத அரசு' என மத்திய அரசை கடுமையாக விமர்சித்த கனிமொழி!

டெல்லி: பாஜக தலைமையிலான மத்திய அரசை தரவுகள் இல்லாத அரசு (NDA - No Data Available) என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

  • இந்தியாவில் மின்னணு வர்த்தகத்தை நிறுவிய ஆப்பிள் நிறுவனம்!

கேஷ்பேக் சலுகைகள், கட்டணமில்லா மாதத் தவணை திட்டம், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமென சிறப்பு தள்ளுபடிகள் என இந்திய வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்த ஆப்பிள் நிறுவனம் தங்களின் மின்னணு வர்த்தகத்தை இந்தியாவில் செயல்படுத்தியுள்ளது.

  • கல்விக் கட்டணத்தின் முதல் தவணையை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பில்லை: நீதிமன்றம்

சென்னை: தனியார் பள்ளிக் கல்விக் கட்டணத்தின் முதல் தவணையை செலுத்துவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

  • டிவி உடைந்ததால் மாணவன் தற்கொலை!

சென்னை: டிவி உடைந்ததால் பெற்றோர் திட்டுவார்களோ என்ற அச்சத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • போலி செயலி உருவாக்கி 15 லட்சம் ரூபாய் மோசடி: இருவர் கைது

சென்னை: மோகன் என்பவரிடம் போலி செயலியை உருவாக்கி 15 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

  • ‘நேர்மையான காவலர்கள்’ என்று கலாய்த்து புகார் மனு: காவல் துறை விசாரணை!

சென்னை: காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் காவல் துறையினர், லஞ்சம் வாங்குவதாக கூறி சமூக வலைதளங்களில், ‘நேர்மையான காவலர்கள்’ என்ற பெயரில் பரவிய புகார் மனு குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • திமுக எம்எல்ஏ நிதி பரிந்துரைக்கு தடைபோட்ட கரூர் ஆட்சியருக்கு நீதிமன்றம் கண்டனம்!

சென்னை : அரவக்குறிச்சி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்பாலாஜியின் தொகுதி நிதி பரிந்துரையை நிராகரித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது.

  • அண்டை நாடுகளுடன் கட்டியெழுப்பிய உறவு வலையை பிரதமர் அழித்துவிட்டார் - ராகுல் சாடல்

அண்டை நாடுகளுடன் பல ஆண்டுகளாக நாம் கட்டி எழுப்பியிருந்த உறவு வலைகளை பிரதமர் நரேந்திர மோடி மொத்தமாக அழித்துவிட்டார் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

  • ஐபிஎல் 2020: தொடரிலிருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்!

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய மிட்செல் மார்ஷ், போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

  • ஐபிஎல் 2020: கேகேஆர் அணிக்கு வாழ்த்து தெரிவித்த புர்ஜ் கலிஃபா!

உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அந்த அணியின் இலச்சினை, வீரர்களின் புகைப்படங்கள் அடங்கிய எல்.இ.டி விளக்குகளால் கட்டடம் ஒளிர செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details