தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7pm - ஜெ. அன்பழகனின் தொகுதி காலி

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7pm
7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7pm

By

Published : Jun 15, 2020, 7:26 PM IST

இந்தியாவில் ஒரே நாளில் 11,502 பேருக்கு கரோனா உறுதி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 502 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஜூன் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு - எவையெவை இயங்கும்?

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னையில் வரும் 19ஆம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் தொகுதி காலியானதாக அறிவிப்பு!

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் காலமானதையடுத்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நடவடிக்கைகள்: 4 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம்

டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், ஐஏஎஸ் அலுவலர்கள் நான்கு பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கல்ல பெருநிறுவங்களுக்குதான் லாபம்: சட்டத்திருத்தத்தால் விவசாயிகள் குமுறல்!

’விவசாயிகள் விளைபொருட்களை அதிகளவில் சேமித்து வைத்து உரிய விலை கிடைக்கும்போது விற்பனை செய்யமுடியும்' என்ற அரசின் விளக்கம் சின்ன வெங்காய விஷயத்தில் தவிடுபொடியாகிறது. எளிதில் அழுகும் தன்மையுடைய வெங்காயத்தை விவசாயிகள் எப்படி அதிகளவில் சேமித்துவைக்கமுடியும் என்ற கேள்வி எழுகிறது.

சிபிஎஸ்சி மாணவர்கள் பொதுத்தேர்வு: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு திருச்சி சிவா கடிதம்

சென்னை: சிபிஎஸ்சி பொதுத்தேர்வு குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு மாணவர்களுக்கு அழுத்தத்தை அதிகரிக்கிறது என திமுக எம்பி திருச்சி சிவா மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

5 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருக்கும் பிரபல நடிகை!

நடிகை பாயல் கோஷ் ஐந்து ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

'வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவேன்'- முகமது அசாருதீன்!

எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வாய்ப்பு வழங்கப்பட்டால், அதனை ஏற்க தயாராக உள்ளேன் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.

அசாம் தீ விபத்து: சிங்கப்பூர் பேரிடர் மேலாண்மைக் குழுவுடன் கைகோர்த்த நிபுணர்கள்

திஸ்பூர்: அசாம் எண்ணெய் கிணற்றில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க அமெரிக்கா, கனடா நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட நிபுணர்கள் இன்று சிங்கப்பூர் பேரிடர் மேலாண்மைக் குழுவுடன் கைகோர்த்தனர்.

'நினைத்தாலே பீதியாகுது' - நேபாளத்தினரின் தாக்குதல் குறித்து கண்ணீர் மல்க விவரிக்கும் சாட்சிகள்

பாட்னா (பிகார்): இந்திய-நேபாள எல்லையில் இந்தியர்கள் மீது நேபாள ஆயுதப் படையினர், அத்துமீறி நடத்திய கொடூரத் தாக்குதலைக் கண்ட சாட்சிகள் அதனை விவரித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details