தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கம்

By

Published : Aug 23, 2021, 7:00 AM IST

top-10-news-at-7-am
top-10-news-at-7-am

சென்னை மெட்ரோ சேவை இன்றுமுதல் இயக்கம்

பயணிகளின் கோரிக்கையை ஏற்று இன்றுமுதல் (ஆக. 23) காலை 5.30 மணிமுதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில் சேவை இயங்குகிறது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் மாணவர்கள் சேர்க்கை

தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் இளநிலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை இன்று முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

'அலுவலர்கள் தவறு செய்தால் நீதிமன்றத்தை நாடுவேன்' - தொழிலதிபர் வைகுண்டராஜன்

திருநெல்வேலி காவல் நிலையத்திற்கு வந்த தொழிலதிபர் வைகுண்டராஜன், தன் மீது போடப்பட்டுள்ள வழக்கில் அலுவலர்கள் தவறு செய்திருந்தால் நீதிமன்றத்தை நாடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஆவின் பாலை புறக்கணிக்கத் தயாராகும் மக்கள்? நடவடிக்கை எடுக்குமா அரசு

மதுரை ஆவின் ஊழல் முறைகேடுகளுக்கு மட்டுமல்ல, அங்கே தரமற்ற பாலை உற்பத்தி செய்து, குளிர்நிலை சரியாகப் பராமரிக்கப்படாமல் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுவதால், பால் பாக்கெட்டுகள் தொடர்ந்து கெட்டுப் போகிறது என்றும், பொதுமக்கள் ஆவின் பாலை புறக்கணிப்பதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கூறியுள்ளது.

நெருப்பில் விழுந்த 14 வயது சிறுவன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் தனியார் ரைஸ்மில் கொட்டிவைத்திருந்த நெருப்புடன் கூடிய சாம்பலில் விழுந்த 14 வயது சிறுவன் உயிரிழந்தார்.

அரசு அனுமதியின்றி இயங்கிய குழந்தைகள் காப்பகம் - 6 சிறுவர்கள் மீட்பு

சத்தியமங்கலம் அருகே அரசு அனுமதியின்றி செயல்பட்டுவந்த குழந்தைகள் காப்பகத்திலிருந்த ஆறு சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

ரோபோ தயாரிப்பில் இறங்கிய டெஸ்லா - எலான் மஸ்க்கின் அடுத்த நகர்வு

பிரபல பேட்டரி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, ரோபோக்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 23

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைக் காண்போம்.

'காஞ்சனா 3' பட நடிகை தூக்கிட்டுத் தற்கொலை?

’காஞ்சனா 3’ திரைப்படத்தில் நடித்த நடிகை அலெக்ஸாண்ட்ரா ஜாவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அன்புதான் நம்மை இயக்குகிறது - அருண் விஜய் நெகிழ்ச்சி

தனது படப்பிடிப்பின் இடைவேளையில் சாலையோர கடையில் சாப்பிட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அருண் விஜய் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details