தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-7-am
top-10-news-at-7-am

By

Published : Aug 9, 2021, 7:05 AM IST

1.பிரதமரின் உழவர் உதவித்தொகை ரூ.2000 இன்று விடுவிப்பு

பிரதமரின் உழவர் உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் (பிஎம் கிசான்) பயனடையும் உழவருக்கான அடுத்த தவணை நிதியை நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 9) விடுவிக்கிறார்.


2.’தற்போதைய நல்ல பெயரை பயன்படுத்தி 100% வெற்றிபெற வேண்டும்’ - கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுரை

இன்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் குறித்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ”மக்களிடையே நமக்கிருக்கும் நல்ல பெயரைப் பயன்படுத்தி உள்ளாட்சித் தேர்தலில் 100 விழுக்காடு வெற்றி பெற வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


3.நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை - இன்று வெளியிடுகிறார் நிதியமைச்சர்

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிடுகிறார்.


4.இரவு நேரங்களில் தூய்மை பணி: 1,786 தூய்மைப் பணியாளர்கள் நியமனம்

சென்னையில் இரவு நேரங்களில் தூய்மை பணி மேற்கொள்வதற்காக 1,786 தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

5.நூறு முன்னாள் கைதிகள் மறுவாழ்வுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிறை தண்டனை அனுபவித்து வெளியேறிய 100 முன்னாள் கைதிகளின் மறுவாழ்வுக்காக தையல் இயந்திரங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், பசுமாடுகள் வெல்டிங் கருவிகள், கார்ப்பென்ட்டர் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை சிறைத்துறை வழங்கி உதவியுள்ளது.


6.அடர்ந்த வனம்; 100 வயது கடந்த மூதாட்டி: சுயநலமின்றி உதவும் தபால் ஊழியர்

எனது அலுவலகத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் ஆபத்தான வழியில் மலைப் பயணம் மேற்கொண்டு குட்டியம்மாளை சந்திக்கிறேன். இதனால் எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை. குட்டியம்மாவுக்கு பென்சன் வழங்க மாதந்தோறும் அவரை சந்திப்பதில் மனமகிழ்ச்சி ஏற்படுகிறது என்கிறார் தபால் ஊழியர் கிறிஸ்துராஜா.


7.IAC-1 விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் சோதனை ஓட்டம் வெற்றி

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிப் போர்க்கப்பல் தனது ஐந்து நாள் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது.


8.செடிகளின் கிளையில் புதிய செடிகள் உருவாக்கல் - வேளாண் விஞ்ஞானிக்கு பாராட்டு

செடிகளின் கிளைகளில் இருந்து எண்ணற்ற வேர்களை உருவாக்கி தொற்றில்லா புதிய செடிகளை உருவாக்க முடியும் என்பதை வேளாண் விஞ்ஞானி ஸ்ரீ லட்சுமி கண்டுபிடித்துள்ளார்.

9.'நேர்கொண்ட பார்வை' மகிழ்ச்சியான குழு - தயாரிப்பாளர் போனி கபூர் ட்வீட்

அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தின் ஒரு அங்கமாக இருந்தது மகிழ்ச்சி அளிப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

10.அக்காவின் இறப்பை மறைத்த தாய் - விமான நிலையத்தில் கதறி அழுத ஒலிம்பிக் வீராங்கனை

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுவிட்டு திருச்சி திரும்பிய தடகள வீராங்கனை தனலட்சுமி, தனது சகோதரியின் இறப்பைக் கேட்டு விமான நிலையத்தில் கதறி அழுதார்.

ABOUT THE AUTHOR

...view details