தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-7-am
top-10-news-at-7-am

By

Published : Aug 8, 2021, 7:02 AM IST

1.விரைவில் ஒலிம்பிக் சாதனையை முறியடிப்பேன் - நீரஜ் சோப்ரா அதிரடி

ஒலிம்பிக் சாதனையான 90.57 மீட்டர் தூரத்தை விரைவில் முறியடிப்பேன் என்று இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.


2.TOKYO OLYMPICS: நீரஜின் தங்கம்... இந்தியாவின் பத்தாவது தங்கம்!

ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வென்றுள்ள தங்கம், இந்தியா பெறும் பத்தாவது தங்கம் என்பது குறிப்பிடதக்கது.

3.உங்கள் தொகுதியில் முதலமைச்சர்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையில் மனுக்கள் பெறப்பட்டுத் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.


4.ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள சிறப்பு முகாம்!

ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கரோனா தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்தி கொள்பவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.


5.வல்லநாடு பாலம் தொடர்பான வழக்கு - மாவட்ட ஆட்சியர், தலைமை பொறியாளர் பதிலளிக்க உத்தரவு

நெல்லை-தூத்துக்குடி இடையேயான வல்லநாடு பாலத்தை சீரமைக்கவும், மறுகட்டமைப்பு செய்யவும் உத்தரவிடக் கோரிய வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலைகள் துறை தலைமை பொறியாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

6.ஒலிம்பிக் வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று திருச்சி விமான நிலையம் வந்தடைந்த இரு வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


7.செல்போனை பிடுங்கியதால் ஆத்திரம்: ஒருவருக்கு அரிவாள் வெட்டு, மற்றொருவர் படுகாயம்

செல்போனை பிடுங்கியதால் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


8.நீரஜ் சோப்ராவை பாராட்டிய ராகுல் காந்தி!

ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.


9.குழுவினருடன் கலகலப்பான 'டான்' சிவகார்த்திகேயன்: வெளியான புகைப்படங்கள்!

'டான்' படப்பிடிப்பிற்கு இடையில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகைகள் பிரியா மோகன், சிவாங்கியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

10.'நீரஜின் திறமை கடவுள் கொடுத்த பரிசு' - முதல் பயிற்சியாளர்

டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் தங்கம் சோப்ரா தங்கம் வென்றுள்ளதையடுத்து, அவரின் திறமை கடவுள் கொடுத்த பரிசு என்று அவரது முதல் பயிற்சியாளர் ஈட்டி எரிதல் பயிற்சியாளர் காசிநாத் நாயக் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details