தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம்- Top 10 News@7AM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

7AM
7AM

By

Published : Jun 2, 2021, 7:19 AM IST

1.இட ஒதுக்கீட்டின்கீழ் பணி நியமனம்: மதம் மாறிய ஊழியர்களைக் கண்டறிந்தால் உடனடி பணிநீக்கம்

சென்னை: பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டின்கீழ் பணி நியமனம் பெறுவதற்காக, மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அரசுக்கு துரோகம் செய்தார் : சாந்தினி - மருத்துவர் தொலைபேசி உரையாடல்

சென்னை: அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மணிகண்டனால் பாதிப்புக்குள்ளான நடிகை சாந்தினி, மணிகண்டனின் நண்பரான மருத்துவர் அருணுடன் தொலைப்பேசியில் உரையாடிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

3.ஒன்றியத்தில் அரசியல் அதிகார குவிப்பு: தொடரும் திமுகவின் மாநில சுயாட்சிக்கான குரல்?

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருவதால் அதிகார குவிப்பை நோக்கி அது நகர்வதாகவும், அதனை எதிர்த்து மாநில உரிமைகளை நிலைநாட்ட திமுக மாநில சுயாட்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து வருவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

4.சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து

கரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன்கருதி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

5.மீண்டும் அச்சுறுத்தும் சீனா: மனிதனுக்குப் பரவிய H10N3 பறவை காய்ச்சல்!

இந்தியா உள்பட உலக நாடுகள் பல கரோனா என்னும் கொடிய பெருந்தொற்றில் இருந்து இன்னும் விடுபடாத நிலையில், சீனாவின் ஜென்ஜியாங் (Zhenjiang) நகரத்தைச் சேர்ந்த 41 வயதான நபருக்கு H10N3 பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

6.கறுப்பு பூஞ்சை சிகிச்சை: ஒன்றிய அரசை கேள்விகளால் துளைக்கும் ராகுல்

கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் அரசின் வழிமுறைகளில் சிக்கி அலைக்கழிக்க வைப்பது ஏன்? என நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

7.இங்கிலாந்தில் கரோனா தொற்றின் மூன்றாவது அலை: நிபுணர்கள் எச்சரிக்கை

லண்டன்: இங்கிலாந்து, கரோனா தொற்று மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக தொற்று நோய் தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் விஞ்ஞானி ரவி குப்தா எச்சரித்துள்ளார்.

8.இணை நோய் இல்லாத 111 பேர் கரோனாவால் உயிரிழப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 1) 26 ஆயிரத்து 513 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 31 ஆயிரத்து 673 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

9.#HBD இசைஞானி இளையராஜா: “இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியத்தின் பேரரசன்”

இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் கொண்ட இன்னிசை தீரனான இசைஞானி இளையராஜா இன்று(ஜூன்.2) தனது 78வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

10.கரோனா அறிகுறிகள்: தனிமைப்படுத்திக்கொண்ட கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார்

கரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாரும் அவரது மனைவியும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details