தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - etv bharat news

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ..

7 AM
7 AM

By

Published : Apr 28, 2021, 6:39 AM IST

1.நகைகளை அடகு வைத்து கரோனா நோயாளிகளுக்கு இலவசமாக மின் விசிறிகள் வழங்கிய தம்பதி!

கோயம்புத்தூர்: கரோனா நோயாளிகளின் வசதிக்காக தான் அணிந்திருந்த நகைகளை அடமானம் வைத்து 100 மின்விசிறிகளை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தம்பதியினர் இலவசமாக வழங்கினர்.

2.இந்தாண்டும் கிராம சபை கூட்டங்கள் நடக்க வாய்ப்பில்லை!

கரோனா பரவல் அதிகரிப்பு, வாக்கு எண்ணும் பணி ஆகியவற்றின் காரணமாக இந்த ஆண்டும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

3.தொடரும் ஆக்ஸிஜன் மரணங்கள்: ம.பியில் 10 பேர் உயிரிழந்த சோகம்!

குவாலியரில் உள்ள கம்லா ராஜா மருத்துவமனையில் 10 பேர் பிராணவாயு (ஆக்ஸிஜன்) கிடைக்காமல் உயிரிழந்தனர்.

4.30 நாள்களில் 44 பிராணவாயு தயாரிப்பு ஆலைகள்: கெஜ்ரிவால் உறுதி

அடுத்த ஒரு மாதத்திற்குள் டெல்லியில் 44 பிராண வாயு தயாரிப்பு ஆலைகளை அமைக்கவுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

5.தமிழ்நாட்டில் புதிதாக 15,830 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 15,830 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

6. நல்லது நடந்தால் சரி: மத்திய சுகாதாரத் துறையின் அழைப்பு குறித்து மதுரை எம்பி கருத்து

மத்திய சுகாதார அமைச்சகம் பதிலளித்திருக்கும் நிலையில், நல்லது நடந்தால் சரி என்று மதுரை மக்களவை எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

7.அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது - விக்கிரமராஜா

சென்னை: ஊரடங்கு குறித்து வியாபாரிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது எனத் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

8.விவேக் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த ஸ்டாலின்!

சென்னை: மறைந்த நடிகர் விவேக் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

9.'ஆர்ட்டிக்கிள் 15' தமிழ் ரீமேக்: உதயநிதியுடன் கைக்கோர்க்கும் ஆரி!

உதயநிதி நடிக்கும் புதிய படமான 'ஆர்ட்டிக்கிள் 15' தமிழ் ரீமேகில் நடிகர் ஆரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

10. DC vs RCB: டெல்லி அணிக்கு 172 ரன்கள் இலக்கு; டிவில்லியர்ஸ் அபாரம்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டிவில்லியர்ஸ் அதிரடியால் பெங்களூரு அணி 171 ரன்களை குவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details