தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 AM - தங்கம் பறிமுதல்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @ 7 AM
Top 10 news @ 7 AM

By

Published : Jan 15, 2021, 7:07 AM IST

'20 மாத குழந்தையால் மறுவாழ்வு பெற்ற 5 பேர்' - இந்தியாவின் இளம் வயது நன்கொடையாளர்!

டெல்லி: மூளை சாவு ஏற்பட்ட 20 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் இளம் வயது உடலுறுப்பு நன்கொடையாளர் என்ற பெருமை தனிஷ்தா எனும் குழந்தைக்கு கிடைத்துள்ளது.

'தமிழ் உணர்வை யாராலும் நசுக்க இயலாது' - காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி

மதுரை: தமிழ் உணர்வை யாராலும் நசுக்க இயலாது என அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை கண்டுகளித்த பிறகு, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி சூளுரைத்தார்.

'திமுகவை வீழ்த்த சசிகலாவுடன் அதிமுக இணையலாம்' - குருமூர்த்தி சூசகம்

சென்னை: திமுக கூட்டணியை வீழ்த்த கங்கை ஜலமாக இருந்தாலும், சாக்கடை ஜலமாக இருந்தாலும் ஏற்க வேண்டும் என, சசிகலாவுடன் அதிமுக இணைவது குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சூசகமாகத் தெரிவித்தார்.

மதுரைன்னாலே வீரம்தான் - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!

மதுரை என்றால் வீரத்திற்குப் பெயர் போன இடம் என உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

இளையராஜா இசையில் பொன்னியின் செல்வன் வெப் சீரிஸ்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் சிரஞ்சீவியின் 'பொன்னியின் செல்வன்' புதிய மகா மெகாவெப் பிலிம் சீரிஸ் தயாராகிறது. அஜய் பிரதீப் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கத்தில் தயாராகும் இந்த வெப் தொடருக்கு இசைஞானி இளையராஜா இசைமைக்கிறார்.

துபாயிலிருந்து கடத்தி வந்த 863 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து கடத்தி வந்த ரூ.44 லட்சம் மதிப்புடைய 863 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு 2 பயணிகள் கைது செய்யப்பட்டனா்.

பர்த்டே பார்ட்டி: வாள் உடன் ஆட்டம் போட்ட ஏழு பேர் கைது!

பெங்களூரு: கல்புர்கியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அரிவாளுடன் ஆட்டம் போட்ட ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கபா டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்; நடராஜன், சுந்தர் அறிமுகம்!

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அரசியல் விளம்பரங்களுக்கு கூகுள் தடை

வாஷிங்டன்: ஜோ பைடன் பதவியேற்பு விழாவையோட்டி, வன்முறையை தடுத்திய இணையதள பக்கங்களில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களை வெளியிட கூகுள் நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

டெல்லி உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு அதிக பனிப்பொழிவு!

டெல்லி : டெல்லி, உத்தரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு இயல்பை விட அதிகமான அடர்த்தியான பனிப்பொழிவு இருக்குமென இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details