தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 5 PM - 5 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 5 PM
Top 10 news @ 5 PM

By

Published : Apr 2, 2021, 5:16 PM IST

திருவாரூர் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!

மக்களவைத் தேர்தலின் போது தனது சட்டப்பேரவைத் தொகுதிகளை அண்டை மாவட்டங்களுக்கு இரவல் கொடுத்து விடும் திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வைகோ வாழ்த்து

சென்னை: தாதா சாகேப் பால்கே விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி என சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுகவைக் குற்றவாளியாக்கி அதிமுக நாயகனான கதை

முதல்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த ஜெயலலிதா தனது அதிகாரத்தை இஷ்டத்துக்கு பயன்படுத்தியதாகவும், தனது அமைச்சர்களை இஷ்டத்துக்கு இருக்கவிட்டதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது.

குறுக்கு வழியில் பிரதமரான மோடி என்னை குறை கூறுவதா? - உதயநிதி

திருப்பூர்: வெளியூர்காரரான முருகனை தாராபுரம் தொகுதியில் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

எமனாக வந்த எலி- இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு: மூவருக்கு தீவிர சிகிச்சை

ஹைதராபாத்: எலி ருசித்த தர்பூசணி பழத்தை உண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மூவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அண்ணா சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: அண்ணா சிலைக்கு தீ வைத்து சேதப்படுத்திய நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனுஷின் 'கர்ணன்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

சென்னை: தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 34 பேர் உயிரிழப்பு

தாய்பெய்: தாய்வானில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 34 பேர் உயிரிழந்த நிலையில், 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பாஜக கூட்டணி வருமான வரித்துறையை தவறாகப் பயன்படுத்துகிறது - திமுக குற்றச்சாட்டு

பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் அரசு இயந்திரமான வருமானவரித்துறை தவறாகப் பயன்படுத்தி அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுகின்றன என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சியை அடக்கி ஒடுக்க, மத்திய அரசு வருமான வரித்துறை பயன்படுத்துகிறது- காங்கிரஸ்

கன்னியாகுமரி: மத்திய அரசானது, எதிர்க்கட்சி தலைவர்களை அடக்கி ஒடுக்க வருமான வரித் துறை, சிபிஐ உள்ளிட்ட துறைகளை பயன்படுத்துகிறது என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details