தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 26, 2021, 5:03 PM IST

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

மாலை 5 மணி செய்தி
மாலை 5 மணி செய்தி

வாலை சுருட்டு... இன்று மாலை ருத்ர தாண்டவம் லிரிக் வீடியோ

சென்னை: மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் வாலை சுருட்டு பாடல் லிரிக் வீடியோ இன்று மாலை வெளியாகிறது.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - மூன்று ராணுவ வீரர்கள் காயம்

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்க முயன்றபோது மூன்று ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.

சுகாதாரத் துறையை மேம்படுத்த போர்க்கால நடவடிக்கை தேவை - வெங்கையா நாயுடு

நாட்டின் சுகாதாரத் துறை தேவையை நிறைவேற்ற அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

மாசடையும் காவிரி ஆறு - கண்டுகொள்ளாத அலுவலர்கள்

கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக சாய துணிகளை அலசி ஆற்றை மாசுபடுத்துகின்றனர். இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகாரளித்தும் காலம் தாழ்த்தி நடவடிக்கை எடுக்கின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கோவிட்-19 - இந்தியாவில் புதிதாக 28,326 பேருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 28 ஆயிரத்து 326 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு விடுப்பு வீட்டு வாடகைப் படி

மகப்பேறு கால விடுப்பில் சென்றால், விடுப்பு காலம் முழுவதும் வீட்டு வாடகைப் படி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

'திமுக மக்களை ஏமாற்றுகிறது' - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

நீட் தேர்வு ரத்து, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 எனப் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து திமுக பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றஞ்சாட்டினார்.

’ரயில்வே பணி நியமன உத்தரவை திரும்பப் பெறுக’ - சு. வெங்கடேசன் எம்பி

சென்னையில் தேர்வாகி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணித்து, உத்தரப் பிரதேசத்தில் தேர்வானோரை தெற்கு ரயில்வேயில் பணி நியமனம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ராமோஜி பிலிம் சிட்டி: தெலங்கானா மாநிலத்தின் சிறந்த சுற்றுலாத் தலத்துக்கான விருது

ராமோஜி பிலிம் சிட்டிக்கு தெலங்கானா மாநிலத்தின் சிறந்த சுற்றுலாத் தலத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா நாளை மாலை 4 மணிக்கு பேகம்பட்டில் உள்ள ப்ளாசா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

”பூஸ்டர் தடுப்பூசி - தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்”

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக வரும் தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details