தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்.

மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
மாலை 5 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Sep 12, 2021, 5:25 PM IST

1. குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு

குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் காட்லோடியா சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆவார். முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி நேற்று பதவியை ராஜினாமா செய்த நிலையில், பூபேந்திர படேல் புதிய முதலமைச்சராகத் தேர்வாகியுள்ளார்.

2. 'விடியல் அரசின் வாய்ச்சவடாலால் மாணவன் தற்கொலை'

தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என்று பொய் வாக்குறுதி கூறிய திமுக அரசின் வாய்ச்சவடாலால் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

3. நீட் மரணம் - மாணவன் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் அஞ்சலி

நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் உடலுக்கு சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, மாணவனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

4. 4 நிமிட தாமதம் - நீட் தேர்வு எழுத அனுமதிக்காத அலுவலர்

சென்னை மயிலாப்பூரிலுள்ள பிஎஸ் சீனியர் செகன்ட்ரி கௌரி மையத்திற்கு நான்கு நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவரை தேர்வு எழுத அலுவலர்கள் அனுமதிக்காத விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

5. லாபம்: பொதுவுடைமைச் சமுதாயம் தொலைந்து போகவில்ல...

‘லாபம்’ திரைப்படத்தை பார்க்கும் முன்பு ஜனநாயகம் எனும் பெயரில் மக்கள் மீது நிகழ்த்தப்படும் மறைமுக வன்முறை குறித்த புரிதல் நமக்கு அவசியமாகிறது. உலகமயமாதல் குறித்த புரிதல் வந்த பின்பு ‘கற்றது தமிழ்’ படத்தை பலரும் கொண்டாடியதுபோல், இத்திரைப்படமும் மக்களால் கொண்டாடப்படும். ஜனநாதன் தனது கடைசி படத்திலும் உழைக்கும் மக்களின் குரலாகவே ஒலித்திருக்கிறார்.

6. பி.எட் பட்டப்படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்

தமிழ்நாட்டில் பி.எட் பட்டப்படிப்பில் சேர மாணவர்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

7. நீட் : மகளின் தலையில் ரப்பர்பேண்டை வாயால் அகற்றிய தந்தை

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று (செப்.12) நடைபெற்று வருகிறது.இந்நிலையில், சென்னை மயிலாப்பூரிலுள்ள பிஎஸ் சீனியர் செகன்ட்ரி கௌரி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள் அனைவரும் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளையும், காதில் அணிந்த கம்மலையும், ரப்பர் பேண்ட் போன்ற பொருட்களையும் அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினர்.அப்போது, மாணவி ஒருவரின் தலையில் ரப்பர்பேண்டில் உலோகம் கலந்த இருந்ததால் அதனை அவரது தந்தை மாணவர்களின் பெற்றோர்களுக்கு மத்தியில் பல்லால் கடித்து அகற்றியது காண்போரை கலங்க செய்தது.

8. இந்தியாவில் ஒரு நாளில் 28 ஆயிரம் பேருக்கு கரோனா

கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 181 பேர் உயிரிழந்துள்ளனர்.

9. வேளாண் சட்டம் நிறைவேறிய செப்.17 கறுப்பு தினம் - அகாலிதளம் அறிவிப்பு

மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றிய செப்டம்பர் 17ஆம் தேதி கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என ஷிரோன்மணி அகாலிதளம் அறிவித்துள்ளது.

10. நீட் அச்சத்தால் மாணவர் தற்கொலை- முதலமைச்சர் வேதனை

நீட் தேர்வு அச்சத்தால் சேலம் மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நாளை(செப். 12) சட்டப்பேரவையில், நிறைவேற்றப்படும் என அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details