தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் top 10 news @ 5 PM - etv bharat

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்...

5 மணி செய்திச் சுருக்கம்
5 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Aug 6, 2021, 5:02 PM IST

1 12ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது!

வேலூரில் பன்னிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

2 அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து!

மயிலாடுதுறை பொறையார் அருகே, புதுச்சேரி செல்லும் அரசு பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

3 ஜெயலலிதா பல்கலைக்கழக எல்லை வரையறை விவகாரம்: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு ரத்து

விழுப்புரம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக அதிகார வரம்புக்குட்பட்ட பகுதியில் கல்வி மையத்தின் மூலம் முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

4 அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் வீட்டில் ரெய்டு!

அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் சோதனை நடத்தியதில் 15 லட்சம் ரூபாய் பணம், 88 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

5 'செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 16ஆம் தேதி போராட்டம்'

செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவிந்தரநாத் தெரிவித்துள்ளார்.

6 நீட் தேர்வு: சொற்ப எண்ணிக்கையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ள அவலம்!

நீட் தேர்வு எழுதுவதற்கு சொற்ப எண்ணிக்கையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஒரு அரசுப் பள்ளி மாணவர் கூட விண்ணப்பிக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

7 தஞ்சாவூர் கல்லூரி கல்வி இணை இயக்குநரை மாற்றக் கோரிக்கை

தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரை மாற்றவேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

8 நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க யாருமில்லை- உச்ச நீதிமன்றம்

சிபிஐ, உளவு பிரிவு காவலர்கள், காவலர்கள் என நீதிபதியின் பாதுகாப்புக்கு மாநில அரசு எதுவும் செய்யவில்லை என தன்பாத் மாவட்ட நீதிபதி கொலை வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா வேதனைத் தெரிவித்தார்.

9 டெல்லி ஜந்தர் மந்தர் விவசாயிகள் போராட்டம்- காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்பட 14 எதிர்க்கட்சிகள் ஆதரவு!

டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்றிய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிவரும் நிலையில் இன்று (ஆக.6) மதியம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

10 கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் - பிரதமர் மோடி

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கும் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, இனி மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details