தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5 PM - 5 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்தி சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 5 மணி செய்தி சுருக்கம்

By

Published : Jul 24, 2021, 5:02 PM IST

1.சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் சுரங்கக் கொள்கையை உருவாக்க வேண்டும் - முதலமைச்சர் அறிவுரை

சுற்றுச்சூழல், சூழலியல் பாதிக்காமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்வது குறித்து நிலையான சுரங்கக் கொள்கையை உருவாக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.


2.ஆபாச படங்கள் பார்ப்போரை குறிவைத்து ரூ.34 லட்சம் மோசடி

ஆபாச படங்கள் பார்த்ததற்கு கைது செய்யாமலிருக்க பணம் செலுத்துமாறு கூறி, இந்தியா முழுவதும் ரூ. 34 லட்சம் மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த 3 பேர், டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


3.ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வில் ஒளியேற்ற குழு வேண்டும் - மக்கள் நீதி மய்யம்

கரோனா தொற்று ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வில் ஒளியேற்ற அரசு ஆலோசனை குழு அமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துள்ளது.


4.சி.ஐ.எஸ்.சி.இ: 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.ஐ.எஸ்.சி.இ (CISCE) 10 மற்றும் 12ஆம் வகுப்புதேர்வு முடிவு வெளியானது.


5.ஸ்டெராய்டுகளால் ஏற்படும் எலும்பு இறப்பு!

ஸ்டெராய்டுகளால் கறுப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவாஸ்குலர் நெக்ரோஸ் எனப்படும் எலும்பு இறப்பும் தொடர்ச்சியாக ஏற்பட்டுவருகிறது. இது எதனால் ஏற்படுகிறது என்ன சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று இக்கட்டுரையில் பார்க்கலாம்.


6.பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டம்: மனைவி வழக்கு!

தடகள வீராங்கனைகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான பயிற்சியாளர் நாகராஜனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


7.அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக தமக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

8.வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக - அதிமுக குற்றச்சாட்டு

நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை என அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.


9.விஜய் ஆண்டனி - தமிழ் சினிமாவின் நினைத்தாலே இனிப்பவன்

வெடி திரைப்படத்தில் இச்சு இச்சு இச்சு கொடு என கவிஞர் வாலி உற்சாகத்தை ஆரம்பித்துவைக்க ரைட்டா ரைட்டே என்ற இடத்தில் அந்த உற்சாகத்தை நம்மிடம் கடத்தியிருப்பார் விஜய் ஆண்டனி.


10.10 years of Kanchana: சூறக்காத்த போல வராடா

2012ஆம் ஆண்டு கன்னடத்தில் ‘கல்பனா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இப்படத்தில் உபேந்திரா நடித்திருந்தார். ராம நாராயணன் இப்படத்தை இயக்கியிருந்தார். சரத்குமார் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் குமார் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details