பாஜக சார்பில் ஒரு லட்சம் முகக்கவசங்கள் வழங்கல்!
சென்னை: பாஜக சார்பில் ஒரு லட்சம் முகக்கவசங்கள், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை மாநில சுகாதாரத்துறை அமைச்சரிடம், அக்கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ் வழங்கினார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு ; ஜூன் 11இல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, ஜூன் 11 இல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
மணிகண்டன் பாலியல் வழக்கு: உதவியாளர், பாதுகாவலரிடம் விசாரணை நடத்தும் போலீஸ்!
முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை பாலியல் புகார் அளித்த வழக்கில் அவரின் உதவியாளர், பாதுகாப்பு காவலர் ஆகியோர் விசாரணைக்கு இன்று ஆஜராகியுள்ளனர்.
முன்களப் பணியாளர் ஒருவர் கூட விடுபட மாட்டார்கள் - சு.வெ., கடிதத்திற்கு ஹர்ஷவர்தன் பதில்
கரோனா முன்களப் பணியாளர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு தூய்மை பணியாளர்கள் கூட விடுபட மாட்டார்கள் என எம்.பி., சு.வெங்கடேசன் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் ஹர்ஷவர்தன் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
கோவின் செயலி: கோவிட் தடுப்பூசி சான்றிதழில் திருத்தம்
பயனாளிகளின் COVID தடுப்பூசி சான்றிதழில் பிழையில்லாமல் இருப்பதை உறுதிசெய்ய, மத்திய சுகாதார அமைச்சகம் கோவின் செயலியில் 'ரைஸ் ஆன் இஷ்யூ' என்ற சிறப்பு அம்சத்தை சேர்த்துள்ளது.