தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 5 PM - மாலை 5 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 5 pm
மாலை 5 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 5 PM

By

Published : Apr 7, 2021, 5:23 PM IST

கரோனா இரண்டாவது அலை... குஜராத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பு!

கரோனா பரவல் மீண்டும் தீவிரமாகியுள்ள நிலையில், குஜராத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக்கொண்ட உமர் அப்துல்லா

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சரான உமர் அப்துல்லா இன்று (ஏப்.07) ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் சார்ந்த நிறுவனத்தில் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்.

வாக்குக்காக கடை பெயரில் ரூ. 2000 போலி டோக்கன் விநியோகம்!

மளிகை கடை ஒன்றின் பெயரைக் கொண்டு வாக்காளர்களுக்கு ரூ.2000 டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கடை நிர்வாகம், டோக்கனைக் கொண்டு யாரும் எங்களை நாடி வரக்கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சென்னைப் பல்கலை., பட்டமளிப்பு விழா: பங்கேற்பாளர்களுக்குக் கரோனா பரிசோதனை

நாளை நடைபெறவுள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொள்ள உள்ளதால், இந்த விழாவல் பங்கேற்கும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

வாக்குப் பெட்டிகளை பைக்கில் எடுத்துச் சென்ற மூவர் சஸ்பெண்ட்

வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப் பெட்டி, விவிபேடுகளை எடுத்துச் சென்ற மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மறைந்த ஆனைமுத்துவிற்குத் தலைவர்கள் மரியாதை

தாம்பரத்தில் பெரியாரின் சீடரான ஆனைமுத்துவின் உடலுக்கு திக தலைவர் கி. வீரமணி, ஜி. ராமகிருஷ்ணன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

விழுப்பும் ஆட்சியர் அலுவலக அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய வந்த நபர்!

தனக்கு சேர வேண்டிய இழப்பீட்டினை உரிய கால அவகாசத்திற்குள் வழங்காததால், நீதிமன்ற உத்தரவின்படி, முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் மகன் சிவானந்தம், விழுப்புரம் ஆட்சியர் அலுவலக அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய வந்தார்.

கிணற்றில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழந்த சோகம்!

தந்தையும் மகனும் கிணற்றில் மூழ்கி ஒன்றாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பணிக்குச் சென்று இருந்த நபர்களின் வீட்டில் கைவரிசை

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் பணிக்குச் சென்றிருந்த நபர்களின் வீட்டில் பூட்டை உடைத்து 25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

கணவரை அலேக்காக தூக்கிய அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா தனது கணவர் விராட் கோலியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details