தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm - 5 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 5 pm
5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm

By

Published : Mar 28, 2021, 5:02 PM IST

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெறப்படும்- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவதாக புதுச்சேரி காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.

ஆந்திர எம்எல்ஏ குந்தோதி வெங்கட சுப்பையா காலமானார்!

ஆந்திர எம்எல்ஏ குந்தோதி வெங்கட சுப்பையா காலமானார். அவருக்கு வயது 62.

வெற்றி பெற்றால் சிதம்பர ரகசியத்தைக் கூறுகிறேன்- குஷ்பு

வரும் தேர்தலில் நான் வெற்றி பெற்றால், திமுகவிலிருந்து வெளியேறியது குறித்த சிதம்பர ரகசியத்தைக் கூறுவதாக ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

அனில் தேஷ்முக் மீது புகார்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது முன்னாள் காவல் ஆணையர் பரம்வீர் தெரிவித்த புகார் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெறவுள்ளது.

சூரத்தில் ரூ.8 ஆயிரம் கோடி ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்பு!

கோவிட் பரவல் காரணமாக சூரத் ஜவுளித் துறையில் ரூ.8 ஆயிரம் கோடி வருமான இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் குறித்து இழிபேச்சு: ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

முதலமைச்சர் குறித்து இழிவாக பேசியதாக திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

வங்க தேசத்தில் வன்முறை; காவலர்கள் 26 பேர் காயம்!

வங்க தேசத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 26) தொழுகைக்கு பின்னர் நடந்த வன்முறை சம்பவங்களில் காவல்நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. இந்தச் சம்பவங்களில் காவலர்கள் 26 பேர் காயமுற்றனர்.

'மீண்டு வா நண்பா'- சச்சினை வாழ்த்திய விவியன் ரிச்சர்ட்ஸ்!

கோவிட் 19 பெருந்தொற்று பாதிப்பிலிருந்து சச்சின் டெண்டுல்கர் விரைந்து மீள, முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் வாழ்த்தியுள்ளார்.

ஓடிடியில் வெளியாகும் கே.எஸ். ரவிக்குமாரின் 'மதில்': மனசாட்சிப்படி எதிரிகளை சந்திக்கும் உரிமைக்குரல்!

முன்னணி இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் நடித்த 'மதில்' படம் ஓடிடியில் வெளியாகிறது.

ராணா, விஷ்ணு விஷால் பாராட்டைப் பெற்ற அறிமுக ஒளிப்பதிவாளர்

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'காடன்' திரைப்படத்தின் சிறப்பான ஒளிப்பதிவுக்காக அறிமுக ஒளிப்பதிவாளர் அசோக்குமாரை நடிகர்கள் ராணா, விஷ்ணு விஷால் இருவரும் பாராட்டியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details