தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 5 PM - latest news

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்

top 10 news at 5 pm
மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 5 PM

By

Published : Mar 26, 2021, 5:19 PM IST

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என இன்று (மார்ச் 26) வெளியிடப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பிட் நோட்டீஸ், குஷ்புவின் ட்விட்டர் - காணாமல்போன மோடி

இந்தத் தேர்தலில், கொங்கு மண்டலம் அதிமுகவின் கையைவிட்டுச் சென்றாலும் சென்றுவிடும் என்று ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கும்போது வானதிக்கு ஆதரவாக அதிமுக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் பிட் நோட்டீஸில் மோடி, அமித் ஷாவின் புகைப்படங்கள் இடம்பெறாதது ஒருவகையில் நல்லதுதான்.

ரூ. 98 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கொலுசுகள் பறிமுதல்!

மகாராஷ்டிரா மாநிலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 98 லட்சம் மதிப்புள்ள 311 கிலோ வெள்ளி கொலுசுகள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

'திமுகவினரே ஊழல் செய்வதை எடப்பாடியை பார்த்துத்தான் கற்கிறார்கள்' - டிடிவி தினகரன்

அமமுக, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து, டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஊழலில் கருணாநிதியை மிஞ்சிவிட்டனர், திமுகவினரே ஊழல் செய்வதை எடப்பாடியை பார்த்துதான் கற்கிறார்கள் எனக் கூறினார்.

27 வகை சீர்வரிசைகளுடன் வேட்பாளருக்கு வரவேற்பு - அசத்திய மதுரை தெற்குத் தொகுதி மக்கள்!

மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் புதூர் பூமிநாதனை அப்பகுதி மக்கள் 27 வகை சீர்வரிசைகளுடன் வரவேற்றனர்.

என் உயிருள்ளவரை நன்னிலம் தொகுதிக்காக உழைப்பேன் - அமைச்சர் காமராஜ்

என்னுடைய பரம்பரையே நன்னிலம் தொகுதி மக்களுக்காக உழைப்பேன் என்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட உணவுத் துறை அமைச்சரும் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான காமராஜ் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை - சீமான்

அனைத்து உயிர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதே அரசியல் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மோடி பரப்புரை மேற்கொள்ளும் இடத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ளும் பாண்டி கோயில் அம்மா திடலின் பாதுகாப்புப் பணிகள் குறித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆய்வுசெய்தார்.

மருத்துவமனைகளிலே விதிகள் பின்பற்றப்படுவதில்லை - சுகாதாரத் துறை முதன்மைச் செயலர்

மருத்துவமனைகளுக்கு உள்ளேயே விதிகள் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை எனச் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்தார்.

இன்முகத்துடன் விருதினை ஏற்றுக்கொண்ட பி. சுசீலா

2019ஆம் ஆண்டிற்கான ஜெயலலிதாவின் சிறப்பு கலைமாமணி விருதினை, பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா இன்முகத்துடன் பெற்றுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details