தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 5 PM - tamilnadu latest news

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்

top 10 news at 5 pm
மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 5 PM

By

Published : Mar 25, 2021, 4:35 PM IST

மயிலாப்பூர் அதிமுக வேட்பாளரிடம் ஈடிவி பாரத்தின் சிறப்பு நேர்காணல்!

”மயிலாப்பூரைச் சுற்றுலாத் தலமாக அறிவிக்க முயற்சி செய்வேன்” என அத்தொகுதி அதிமுக வேட்பாளர் நட்ராஜ் ஈ டிவி பாரத்திடம் கூறியுள்ளார்.

சசிகலா ஆதரவை கேட்கலாமா? ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆலோசனை

தேர்தல் நேரத்தில் அதிமுக கூட்டணி வெற்றிபெற சசிகலா ஆதரவை கேட்கலாமா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ‌. பன்னீர்செல்வமும் சேலத்தில் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தை அதன் பணியைச் செய்யவிடுங்கள்!

வாக்குப்பதிவுக்கு இரு வாரங்கள் உள்ள நிலையில், தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் வழக்குகள் தொடராமல், தேர்தல் ஆணையத்தை அதன் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

’திமுக என்றாலே சுயநலம், சுயநலம் என்றாலே திமுக’ - ராமதாஸ்

திருப்போரூர் தொகுதியில் பாமக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய ராமதாஸ், ”திமுக என்றாலே சுயநலம், சுயநலம் என்றாலே திமுக” என விமர்சித்தார்.

தமிழர்களின் உணர்வுக்கு எதிராக வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது - வீரப்ப மொய்லி

தமிழர்களின் உணர்வுக்கு எதிராக இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது என காங்கிரஸ் மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லி விமர்சித்துள்ளார்.

’25 கோடி ரூபாய் கட்டுமானம் உடைந்ததுதான் எடப்பாடி அரசின் சாதனை’ - ஸ்டாலின் தாக்கு

திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின், ”தமிழ்நாடு பெரியார் மண், இங்கு மோடி மஸ்தான் வேலை எல்லாம் பலிக்காது” எனப் பேசினார்.

தேர்தல் விதிமீறல் தொடர்பாக 80 வழக்குகள்: திருவள்ளூர் காவல் துறை

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக மாவட்டம் முழுவதும் காவல் நிலையத்தில் 80 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

சரக்கு வாங்க காசு இல்லாமல் சானிடைசர் குடித்து உயிரைவிடும் மதுப்பிரியர்கள்!

விஜயவாடாவில் மதுபானம் விலை ஏற்றத்தால், சானிடைசர் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்?

எல்லைப் பகுதிகளில் சுமுகமான உறவு நீடித்துவரும் நிலையில், இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் மழையில் காட்ஸில்லா vs காங்!

காட்ஸில்லா vs காங் திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி தமிழ்நாடு முழுவதும் வசூலை குவித்துவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details