தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm - latest news

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 5 pm
5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm

By

Published : Mar 23, 2021, 4:54 PM IST

இன்னல்களைக் கடந்து வலுப்பெற்றுள்ளது நாடு - இது மோடியின் கூற்று

பெருந்தொற்று காலத்தில் பல இன்னல்களைச் சந்தித்திருந்தபோதிலும் நாடு வலுப்பெற்றுள்ளதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார்.

கோவிட்-19 தடுப்பூசி: வயது கட்டுப்பாடை நீக்க ராஜஸ்தான் முதலமைச்சர் கோரிக்கை

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் தடுப்பூசிக்கான வயது கட்டுப்பாடை நீக்க ராஜஸ்தான் முதலமைச்சர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்

நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட புகாரில் கைதான ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வங்கியில் கடன் கேட்ட வேட்பாளர்

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வங்கியில் ரூ. 46 கோடி கடன் கேட்டு மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்

நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட புகாரில் கைதான ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

ரெப்கோ வங்கி மூலம் பணம் பட்டுவாடா: அதிமுக மீது புகாரளித்த வங்கி இயக்குநர்

தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான அதிமுக ரெப்கோ வங்கி மூலம் பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்கக் கோரி அவ்வங்கியின் இயக்குநர் திருவேங்கடம் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

வேளச்சேரி அதிமுக வேட்பாளர் மீது காங்கிரஸ் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார்!

வேளச்சேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் மீது காங்கிரஸ் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளது.

ஆபாச படம் அனுப்பி பெண் வேட்பாளருக்கு மிரட்டல்!

தமிழர் முன்னேற்றப்படை அமைப்பின் நிறுவனரான வீரலட்சுமி, தனக்கு ஆபாச படம் அனுப்பி மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

கர்நாடக அமைச்சர் சிடி வழக்கு: பெண்ணின் பெற்றோர் வாக்குமூலம் பதிவு!

சிடி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் வாக்குமூலத்தை, இறுதியாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் பதிவுசெய்துள்ளனர்.

'விசில்' அடிக்க அழைக்கும் மயில்சாமி!

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் மயில்சாமிக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details