தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm - tamilnadu latest news

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 5 pm
5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm

By

Published : Mar 20, 2021, 5:17 PM IST

சென்னைக்கு வருகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்?

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணத்தின் ஒரு அங்கமாக அவர் சென்னைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் - உச்ச நீதிமன்றம் கேள்வி

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சீரான நிலையில் பெட்ரோல், டீசல் விலை- காரணம் என்ன?

நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை கடந்த மூன்று வாரங்களாக சீரான நிலையில் உள்ளது. கூடவும் இல்லை, குறையவும் இல்லை காரணம் என்ன?

புதுச்சேரியில் 489 பேர் வேட்புமனு தாக்கல்: ரங்கசாமி போட்டியிடும் தொகுதியில் 24 பேர் மனு தாக்கல்!

புதுச்சேரியில் இதுவரை, 489 பேர் வேட்புமனு தாக்கல்செய்துள்ளனர். அதிகபட்சமாக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி போட்டியிடும், ஏனாம் தொகுதியில் 24 பேர் மனு தாக்கல்செய்துள்ளனர்.

தாராபுரம் வேட்பாளரை ஆதரித்து கனிமொழி பரப்புரை: பேசிக்கொண்டிருக்கும் போதே கலைந்த கூட்டம்!

தாராபுரம் தனித் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கயல்விழியை ஆதரித்து கனிமொழி பரப்புரை செய்துகொண்டிருந்தபோது, கூட்டம் கலைந்துசென்றது.

வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் 3 கூடை மாம்பழம் எனக்கு வர வேண்டும்- பாமக நிறுவனர் ராமதாஸ்

கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் செல்வகுமாரை ஆதரித்து, மங்கலம் கிராமத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.

தேர்தல் விதிமுறைகளை மீறிய அதிமுகவினர்- கண்டுகொள்ளாத பறக்கும் படை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தேர்தல் பரப்புரையில் கலந்துகொள்ள வந்தவர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விண்வெளி பாதுகாப்பிற்காக நாசாவுடன் கைக்கோக்கும் ஸ்பேஸ்எக்ஸ்!

விண்வெளி பாதுகாப்பை மேம்படுத்த நாசாவுடன், எலான் மஸ்க்கின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

மெக்ஸிகன் ஓபன்: நில நடுக்கத்திற்கு மத்தியிலும் போட்டியைத் தொடர்ந்த வீரர்கள் - வைரல் காணொலி

மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியின்போது நிலநடுக்கம் ஏற்பட்டதைக்கூட பொருட்படுத்தாத வீரர்கள் விளையாட்டைத் தொடர்ந்த நிகழ்வு காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

கர்ணன் பட டீசர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள, ‘கர்ணன்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details