தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm - TOP 10 NEWS @ 5 PM

ஈ டிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்.

TOP 10 NEWS @ 5 PM
5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm

By

Published : Mar 11, 2021, 5:00 PM IST

’ஜெயலலிதா உற்சவர்; சசிகலா மூலவர்’ - அமமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ!

அதிமுகவையும் ஜெயலலிதாவையும் 32 ஆண்டுகளாக இயக்கி வந்த சசிகலாவை, தொண்டர்களே மீண்டும் அரசியலுக்கு அழைத்து வருவார்கள் என அமமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் கூறியுள்ளார்.

கூடுதல் தொகுதிகளை அதிமுக ஒதுக்கும்! - ஜி.கே.வாசன் நம்பிக்கை!

தொகுதிகள் ஒதுக்கீட்டில் தமாகாவின் கோரிக்கையை அதிமுக ஏற்கும் என்றும், சைக்கிள் சின்னத்திற்காக கடைசி வரை போராடுவொம் எனவும் அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு - பின்னணி ரகசியம்

அதிமுக இரண்டாவது வேட்பாளர் பட்டியலில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கக் கோரிய வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

செம்மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை வழியாக கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே

கன்னியாகுமரி-ஹவுரா ( கொல்கத்தா) இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயிலை மதுரை வழியாக இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

வன்னியர் உள் இடஒதுக்கீடுக்குத் தடை கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்ற அமர்வுக்கு மாற்றம்!

வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கியதற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

'பாமக'விற்கு பூந்தமல்லி தொகுதி: அதிமுக தொண்டர்கள் போராட்டம்

பூந்தமல்லி தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதால் அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

காதல் விவகாரம்..? நாமக்கல்லில் இளைஞர் அடித்து கொலை

நண்பர்கள் இருவரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில், ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிக்டாக் பிரபலம் நடித்துள்ள படத்தின் டிரெய்லர் வெளியீடு!

டிக்டாக் பிரபலமான இலக்கியா நடித்துள்ள 'நீ சுடத்தான் வந்தியா' படத்தின் இசை, டிரெய்லர் வெளியாகியுள்ளது.

நீண்ட தேடலுக்குப் பின் விக்ரமுடன் இணையும் சிம்ரன்

விக்ரம் நடிக்கும் 60ஆவது படத்தில் நடிகை சிம்ரன் இணைந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details