தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - 5 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @ 5 pm
Top 10 news @ 5 pm

By

Published : Sep 23, 2020, 5:19 PM IST

  • கல்விக் கட்டணத்தின் முதல் தவணையை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பில்லை: உநீ

தனியார் பள்ளிக் கல்விக் கட்டணத்தின் முதல் தவணையை செலுத்துவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

  • 32 நாட்களுக்குப் பின் டிஸ்சார்ஜ் ஆன ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்

விஷம் கொடுக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்குள்ளான ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவல்னி தற்போது உடல் நிலை முன்னேற்றம் கண்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

  • தேர்தல் வெற்றி வேண்டுதலுக்காக ஹெலிகாப்டரில் பறந்த அதிமுக நிர்வாகி...!

விருதுநகர்: மாநிலத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி கோவையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.

  • ஐபிஎல் 2020: நேருக்கு நேர்...! கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

  • காவல் துறைக்குத் தெரியாமல் இளைஞரின் உடல் எரிப்பு: ஐந்து பேர் கைது!

புதுக்கோட்டையில் தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞரின் உடலை காவல் துறையினருக்குத் தெரியாமல் எரித்த ஐந்து பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

  • தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டி விபத்தில் சிக்கி பலி

சென்னை: தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

  • வேளாண் சட்ட முன்வடிவுகளை எதிர்த்த சரத்பவாருக்கு சிடிடிபி நோட்டீஸ் - தேர்தல் ஆணையம் மறுப்பு

டெல்லி : சரத்பவாருக்கு மத்திய நேரடி வரி வாரியம் (சிடிடிபி) நோட்டீஸ் அனுப்ப வேண்டுமென எந்த உத்தரவையும் வழங்கவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்தியுள்ளது.

  • ஆர்.கே. சுரேஷின் 'விசித்திரன்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சென்னை: ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் 'ஜோசப்' திரைப்படத்தின் ரீமேக் ஆன 'விசித்திரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

  • 'மாஸ்டர்' ஓடிடியில் வெளியாகாது - லோகேஷ் கனகராஜ்!

கோயம்புத்தூர்: மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பில்லை. திரையரங்கம் திறந்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

  • சிறுமிக்கு பாலியல் தொல்லை - அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு பிணை மறுப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நாஞ்சில் முருகேசனுக்கு பிணை வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details