தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-5-pm
top-10-news-at-5-pm

By

Published : Sep 16, 2020, 4:56 PM IST

  • பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்.30ஆம் தேதி தீர்ப்பு; அத்வானி ஆஜராக உத்தரவு

டெல்லி: அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வரும் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளது.

  • தமிழ்நாட்டில் உயரும் அரசு பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை!

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக இரண்டு அரசு பல்கலைகழகங்கள் அமையவிருப்பதையடுத்து அரசு பல்கலைகழகங்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.

  • வேதா இல்ல அவசரச் சட்டம் ரத்து செய்யக்கோரிய வழக்கு: ஆளுநரின் செயலர் பதிலளிக்க உத்தரவு

சென்னை: வேதா நிலையத்தை அரசுடைமையாக்கும் அவரசச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தீபக் தொடர்ந்த வழக்கில் ஆளுநரின் செயலர், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை செயலர், இயக்குநர், சட்ட துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • ஜப்பான் பிரதமருக்கு மோடி வாழ்த்து

புதிதாக பதவியேற்றுக்கொண்ட ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவுக்கு தொலைபேசி மூலம் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • நடப்பாண்டில் மொத்த வரி வருவாய் 22.5% சரிவு

கடந்தாண்டை ஒப்பிடும்போது மத்திய அரசின் வரி வருவாய் 22.5 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • வீட்டின் மேல் கூரை சரிந்து விழுந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு, 3 பேர் படுகாயம்!

சேலம்: பெரமனூர் அருகே வீட்டின் மேல் கூரை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • 'தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது' - எஸ்.பி.பி. சரண் தகவல்!

சென்னை: தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் டுவீட் செய்துள்ளார்.

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை : தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுரேஷ் ரெய்னா உறவினர் கொலை: அப்டேட்டை உறுதிசெய்த பஞ்சாப் முதலமைச்சர்

சண்டிகர்: சுரேஷ் ரெய்னாவின் உறவினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகருக்கு முன்பிணை வழக்கிய நீதிமன்றம்!

சென்னை : தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி சேகர் மன்னிப்பு கோரியதை அடுத்து, அவருக்கு நிபந்தனையுடன் முன்பிணை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details