1.சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவராக சுப. வீரபாண்டியன் நியமனம்!
சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவராக சுப. வீரபாண்டியனும், உறுப்பினர்களாக முனைவர் கி. தனவேல், பேராசிரியர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஏ.ஜெய்சன், பேராசிரியர் ஆர். இராஜேந்திரன், கோ. கருணாநிதி ஆகியோரை நியமித்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2. நீர் வழிப்பாதையில் கொட்டப்பட்ட அனைத்தையும் அப்புறப்படுத்துங்கள் - நீதிமன்றம் அதிரடி
எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்ல கன்வேயர் அமைக்கும் பணியின்போது, கொற்றலை ஆற்றில் நீர் வழிப்பாதையில் கொட்டப்பட்ட கட்டுமான பொருள்கள் முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3. பாலிடெக்னிக் தேர்வு கட்டுபாடுகள் - மையத்திற்குள் நகை, பெல்ட், ஷூ அணிய தடை
பாலிடெக்னிக் தேர்வினை எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் பெல்ட், நகைகள், ஷூ, அதிகம் உயரம் கொண்ட செருப்பு போன்றவை அணியக் கூடாது. சாதாரண செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும் என நீட் தேர்வு கட்டுபாடுகளை போல ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வறை நுழைவுச்சீட்டில் அறிவுறுத்தியுள்ளது.
4. மரணம் அடைந்த பிறகும்கூட சாதி ஒரு மனிதனை விடவில்லை - நீதிமன்றம் வேதனை
மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை என வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடல்களை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
5. அதிரும் உ.பி., 'வாரணாசி டூ ரேபரேலி'.. பிரியங்கா காந்தி யாத்திரை!
உத்தரப் பிரதேசத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, விவசாய கடன்கள் மற்றும் மின்சார கட்டணம் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பாரபங்கியில் யாத்திரையை இன்று (அக்.23) தொடங்கினார்.