தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 28, 2021, 4:00 PM IST

ETV Bharat / state

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச்சுருக்கம்..

3 மணி செய்திச்சுருக்கம்
3 மணி செய்திச்சுருக்கம்

அமித் ஷாவை சந்திக்கிறாரா அமரீந்தர் சிங்?

பஞ்சாப்பின் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் இன்று டெல்லி செல்லவுள்ளதாகவும், பாஜக தேசியச் செயலாளர் ஜெ.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காவல்துறை அருங்காட்சியகம்: திறந்துவைத்த ஸ்டாலின்!

காவல்துறை அருங்காட்சியகத்தைப் பொதுமக்களின் பார்வைக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி!

தமிழ்நாட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில், ஏழு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிந்த கையோடு பள்ளிகளைத் திறக்க உத்தேசம்!

சென்னை: தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னர் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரசில் இணையும் கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி

சிபிஐ கட்சியின் இளம் தலைவரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவருமான கன்னையா குமார், குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட பலர் இன்று (செப். 28) ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணையவுள்ளனர்.

விஜய்க்கும் ஷோபாவுக்கும் மனக் கசப்பு இல்லை - எஸ்.ஏ. சந்திர சேகர்

சென்னை: விஜய்க்கும் அவரது தாய் ஷோபாவிற்கும் இடையில் எந்த மனக்கசப்பும் இல்லை என எஸ்.ஏ. சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி

அக்டோபர் 1ஆம் தேதிமுதல் அரசுப் பள்ளி மாணாக்கருக்கு அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதற்கு அனுமதி கட்டணம் இல்லை, காவலர் அருங்காட்சியகத்தை இந்த மாதம் 30ஆம் தேதிவரை பொதுமக்கள் பார்வையிட இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விஜய்யுடன் முதல்முறையாக இணையும் இசையமைப்பாளர்?

நடிகர் விஜய் நடிக்கவுள்ள தளபதி 66 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

புதிய ஜேம்ஸ் பாண்டாகும் வில் ஸ்மித்?

புதிய ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் வில் ஸ்மித்தை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

களைகளாக மாறும் இளந்தளிர்கள் - மருத்துவர் ராமதாஸ் வேதனை

சிறுவர்கள் தவறான பாதையில் பயணிப்பதைத் தடுத்து, முன்னேற்றப் பாதையில் பயணிப்பதை உறுதிசெய்ய அரசும், சமுதாயமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details