தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @3 PM - chennai news

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ..

3 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @3 PM
3 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @3 PM

By

Published : Jun 17, 2021, 3:19 PM IST

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின்

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திற்கு ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தில் மு.க. ஸ்டாலின் ஆய்வு

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கட்டப்பட்டு வரும் திமுக அலுவலுகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

'காணாமல்போன கோயில் சிலைகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுங்கள்' - உயர் நீதிமன்றம்

காணாமல் போன கோயில் சிலைகள், நகைகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட விஜய் தங்கை

ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த நிவேதா தாமஸ் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்.

பப்ஜி மதனின் வங்கி கணக்கை முடக்க காவல் துறை திட்டம்!

சென்னை: யூ-ட்யூபர் மதனின் மனைவி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், மதனின் வங்கி கணக்கை முடக்க திட்டமிட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடுவது இப்படி தான்: சிபிஎஸ்இ விளக்கம்

பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.

நீலகிரியில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு

தென்மேற்குப் பருவக்காற்றின் காரணமாக, நீலகிரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதன்முறையாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விமானிகளுடன் பறந்த விமானம்

நாட்டிலேயே முதன்முறையாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட விமானி மற்றும் விமானக்குழுவினரைக் கொண்டு, சிறப்பு விமானம் விஸ்டாரா இயக்கப்பட்டுள்ளது.

'ரூ. 61 கோடியில் குறுவை சாகுபடி திட்டம்' - முதலமைச்சர் அறிவிப்பு

டெல்டா விவசாயிகளுக்காக ரூ. 61 கோடி மதிப்பில் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்மூலம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 259 விவசாயிகள் பயனடைவார்கள்.

கவச உடை அணிந்து கரோனா நோயாளிகளை சந்தித்த ஆட்சியர்!

கரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பிரபுசங்கர் முதல்நாளே கவச உடை அணிந்து கரோனா நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

ABOUT THE AUTHOR

...view details