தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - டாப் 10 நியூஸ்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கம்
ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Dec 18, 2020, 3:09 PM IST

1. தியானம் செய்ய இளையராஜாவுக்கு ஏன் அனுமதி அளிக்கக்கூடாது?

சென்னை: பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்து கொள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை ஏன் அனுமதிக்கக்கூடாது என பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2. மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்?

சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கும் செயலை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவது குறித்து தொழிற்சங்கங்கள் இன்று (டிச. 18) அறிவிப்பு வெளியிடுகின்றன.

3. தலைமை அலுவலகத்தின் மின்நிலைய பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைப்பு!

சென்னை: தொடரும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை ஒட்டி, தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்திலேயே துணை மின்நிலைய பராமரிப்புப் பணி, அரசு சாரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

4. சிசிடிவி வெளியீடு: பாட்டி பேரனை லாவகமாக காப்பாற்றிய காவலர்!

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் பயணிகள் ரயிலில் தனது பேரனுடன் வந்த பாட்டி, தனது இடத்தில் இறங்கியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய பாட்டி, தனது பேரனுடன் ரயிலில் சிக்கப் பார்த்தார். இதனைப் பார்த்த ரயில்வே காவலர் பாட்டியையும், பேரனையும் லாவகமாக காப்பாற்றினார். இந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

5. அமெரிக்காவில் புயல்: 5 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் குளிர்கால புயல் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

6. ஆட்கொல்லி யானையை பிடிப்பதில் சிக்கல் - ட்ரோன் மூலம் கண்காணிப்பு!

நீலகிரி: பந்தலூர் அருகே 3 பேரை கொன்ற ஆட்கொல்லி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுவருவதால், ட்ரோன் கேமரா மூலம் யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

7. ஷாப்பிங் மாலில் நடிகைக்கு நேர்ந்த சோகம்: விசாரணையை தொடங்கிய போலீஸ்!

எர்ணாகுளம்: சூப்பர் மார்கெட்டில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட நபர்கள் குறித்தான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

8. மகாராஷ்டிராவில் பணம் கேட்டு மிரட்டிய பத்திரிகையாளர்கள் இருவர் கைது!

மும்பை: கோரேகானில் செயல்பட்டு வரும் சலூன் கடையின் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய பத்திரிகையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

9. பகலிரவு டெஸ்ட்: அஸ்வின் சுழலில் திணறும் ஆஸ்திரேலியா!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

10. 'பிசாசு-2' - பேயாக நடிப்பவர் இவர்தானாம்!

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள 'பிசாசு-2' திரைப்படத்தில் பேயாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details