தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - national

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 3PM
Top 10 news @ 3PM

By

Published : Oct 24, 2020, 3:08 PM IST

நாயக்கர் கால சதிகல், நடுகல்... கடவுளாக வழிபட்ட மக்களுக்கு ஷாக்

தேனி: தங்கம்மாள்புரம் கிராமத்தினர் பல ஆண்டுகளாக வழிபாடு செய்து வந்த கற்சிலைகள், நாயக்கர் கால சதிகல், நடுகல் என போடிநாயக்கனூர் கல்லூரியைச் சேர்ந்த வரலாற்று பேராசிரியர் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

13 மாவட்டங்களில் கனமழை! - வானிலை மையம் தகவல்!

சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

'எதிர்மறை சிந்தனைகளை அகற்றி, புதிய சாதனைகள் புரிவோம்' - டிடிவி தினகரன் வாழ்த்து

சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பொது மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

ரூ.2 கோடிக்கும் கீழ் கடன் பெற்றவர்களுக்கு 6 மாத வட்டிக்கான வட்டி தள்ளுபடி

இரண்டு கோடி ரூபாய்க்கும் குறைவாக கடன் வாங்கியவர்கள், ஆறு மாத கால வட்டிக்கான வட்டி தொகை செலுத்துவதில் தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பாஜகவிலிருந்து மேலும் பலர் விலகலாம் - ஏக்நாத் காட்சே தகவல்

மும்பை: பாஜகவை விட்டு வெளியேற பலர் விரும்புவதாக மகாராஷ்டிர மாநில பாஜகவின் முன்னாள் முக்கியப் பிரமுகர் ஏக்நாத் காட்சே தகவல் தெரிவித்துள்ளார்.

சிஏ தேர்வு: நவம்பர் 1ஆம் தேதி அட்மிட் கார்டு வெளியீடு

ஹைதராபாத்: நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பட்டய கணக்காளர் தேர்வுக்கான அட்மிட் கார்டு வரும் நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ பட ட்ரெய்லர் வெளியீடு!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ் இந்தியா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

'சீறும் புலி'யில் பிரபாகரனாக சீறிப்பாயும் பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா நடிக்கும் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'சீறும் புலி' திரைப்படத்தின் புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது.

'இதய அறுவை சிகிச்சைக்கு பின் நலமுடன் இருக்கிறேன்' - அர்னால்டு

வாஷிங்டன் : இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் தான் நலமுடன் இருப்பதாக ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ரூ.2 கோடிக்கும் கீழ் கடன் பெற்றவர்களுக்கு 6 மாத வட்டிக்கான வட்டி தள்ளுபடி

இரண்டு கோடி ரூபாய்க்கும் குறைவாக கடன் வாங்கியவர்கள், ஆறு மாத கால வட்டிக்கான வட்டி தொகை செலுத்துவதில் தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details