தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்...

Top 10 News @ 3 pm
Top 10 News @ 3 pm

By

Published : Oct 11, 2021, 3:11 PM IST

1. நீட் தேர்வு விண்ணப்பங்களைத் திருத்த காலக்கெடு நீட்டிப்பு

நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், மேலும் மூன்று நாள்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2. ஆர்யன் கான் பிணை மனு இன்று விசாரணை!

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் பிணை மீதான வழக்கின் விசாரணை இன்று மும்பை நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

3. விஜயதசமி நாளன்று கோயில்கள் திறப்பு? - உயர் நீதிமன்றத்தில் மனு

வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) விஜயதசமி நாளன்று கோயில்களைத் திறக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கிற்கான மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

4. என் மீது சுமத்தப்பட்ட புகார் ஆதாரம் அற்றது - திமுக எம்பி ரமேஷ்

என் மீது சுமத்தப்பட்ட புகார் ஆதாரம் அற்றது என்பதைச் சட்டத்தின் முன் உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன் என்று கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தபின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

5. ஜம்மு காஷ்மீரில் 4 இடங்களில் துப்பாக்கிச் சூடு.. 5 வீரர்கள் வீரமரணம்.. 2 பயங்கரவாதிகள் பலி!

ஜம்மு காஷ்மீரில் ஒரே மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜூனியர் கட்டளை அலுவலர் மற்றும் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மற்றொரு தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

6. புதிய அவைத்தலைவர் குறித்து ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் ஆலோசனை

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், புதிய அவைத்தலைவர் குறித்து ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

7. சம்பா விதை நெல்லுக்கான மானியத்தை உடனே அறிவிக்க கோரிக்கை

சம்பா விதை நெல்லுக்கான மானியத்தை உடனே அறிவிக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட உழவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

8. இந்தியாவில் 18 ஆயிரம் கோவிட் பாதிப்புகள்!

நாட்டில் ஒரே நாளில் 18 ஆயிரம் புதிய கோவிட் பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

9. இந்தியன் பட நடிகர் நெடுமுடி வேணு உயிரிழப்பு

மலையாள திரைப்பட நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

10. சீமானையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய வலியுறுத்தும் ஜோதிமணி

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து போராட்ட மேடையில் அவதூறாகப் பேசியதாக சாட்டை துரைமுருகனை மட்டும் கைதுசெய்தால் போதாது சீமானையும் கைதுசெய்ய வேண்டும் என எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details