தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் TOP 10 NEWS at 3 PM - ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 3 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் மதியம் 3 மணி செய்திச் சுருக்கம்
ஈடிவி பாரத்தின் மதியம் 3 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Apr 23, 2021, 3:41 PM IST

1 வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக நுண் பார்வையாளர்களுக்குப் பயிற்சி!

ராமநாதபுரம்: தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக நுண் பார்வையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

2 பைக்கில் வைத்திருந்த ரூ.4.60 லட்சம் திருட்டு: சிசிடிவி மூலம் சிக்கிய குற்றவாளி!

திருவாரூர்: மன்னார்குடியில் பரோடா வங்கியின் அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் திருடிச் சென்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

3 சிறையில் கைதி கொலை - உறவினர்கள் போராட்டம்!

சிறையில் மற்ற கைதிகள் தாக்கியதில், சக கைதி ஒருவர் உயிரிழந்தார். தகவலறிந்து இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

4 20 லட்சம் தடுப்பூசிகளை வழங்க பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்த நிலையில், தமிழ்நாட்டிற்கு 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

5 ஸ்ரீஅமிர்தகடேசுவரர் கோயிலில் கால சம்ஹாரம்!

தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயிலில் மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்யும் கால சம்ஹாரம் திருவிழா நடைப்பெற்றது.

6 தண்ணீரில் மூழ்கிய ஜீப்: 9 பேர் உயிரிழப்பு!

பாட்னா: பிகாரிலுள்ள பீபா பாலத்தின் மீது ஜீப் மோதிய விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

7 மரக்கட்டைகளுக்குத் தட்டுப்பாடு, பாதி எரிந்த உடல்கள்- ம.பி.யின் அவலநிலை!

மத்தியப் பிரதேசத்தில் மரக்கட்டைகள் தட்டுப்பாடு காரணமாக, பாதி எரிந்த நிலையில் உள்ள உடல்களை தெரு நாய்கள் கடித்து திண்ணும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

8 வெளிப்புற சிகிச்சைகள் தற்காலிக நிறுத்தம் - ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு!

வெளிப்புற சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது.

9 முதலமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணித்த மம்தா!

கொல்கத்தா: பிரதமர் மோடியுடன் நடைபெற்ற முதலமைச்சர்கள் கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார்.

10 ஆக்ஸிஜன் தட்டுப்பாடு: ஜெர்மனி உதவியை நாடும் இந்தியா

கோவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியா ஜெர்மனியின் உதவியை நாடியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details