தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @3PM - top 10 news

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்

3 மணி செய்தி
3 மணி செய்தி

By

Published : Apr 12, 2021, 2:55 PM IST

1.சென்னை மாநகராட்சி வரவு செலவு திட்ட மதிப்பு வெளியீடு!

2020-2021-ஆம் நிதியாண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூ.3815.07 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இனங்களின் செலவு, திருத்திய மதிப்பீட்டில் ரூ.3582.61 கோடியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

2.மறைந்த மாதவராவின் உடல் நல்லடக்கம்

விருதுநகர்: மறைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

3.துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது - ரேலா மருத்துவமனை

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது என ரேலா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

4.அதிமுகதான் அரக்கோணம் கொலைகளைச் செய்தது - வேல்முருகன்

திமுக கூட்டணி கட்சியினரா அந்த இரண்டு இளைஞர்களை கொலை செய்தார்கள். அதிமுகவில் பொறுப்பில் இருப்பவர்களின் மகன்கள்தான் இந்தக் கொலைக்கு காரணம். எனவே அதிமுகதான் இந்த கொலையை செய்திருக்கிறது.

5.கரோனாவுல இறந்ததாக சான்றிதழ்... இறுதிச்சடங்கில் திடீர் ட்விஸ்ட்!

பாட்னா: பிகாரில் உயிருள்ள நபரை, கரோனாவில் இறந்துவிட்டதாக கூறி சான்றிதழ் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6.கரோனாவை வெல்வதற்கு இதெல்லாம் உதவாது - சிதம்பரம் விமர்சனம்

டெல்லி: கரோனாவுக்கு எதிரான போரை வெல்வதற்கு பெருமை ததும்பும் பேச்சும் உரையும் உதவாது என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

7.யுகாதி வாழ்த்தோடு 'அந்த' வேண்டுகோளையும் வைக்கத் தவறாத தமிழிசை!

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கு ஆண்டுப் பிறப்பு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

8.நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ. 2000 நிவாரணம் - அரசாணை வெளியீடு

சென்னை: நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் புதிதாக பதிவு செய்துள்ள கலைஞர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

9. திபெத் நாடாளுமன்றத் தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

சிம்லா: திபெத் நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியாவில் உள்ள ஏராளமான திபெத்தியர்கள் வாக்களித்தனர்.

10. வழக்கறிஞராக நடிக்கும் சூர்யா!

டிஜே ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details