தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm - latest news

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 3 pm
3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm

By

Published : Mar 26, 2021, 3:24 PM IST

வங்கதேசத்தின் 50ஆவது சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசம் சென்றுள்ளார். அங்கு அந்த நாட்டின் 50ஆவது சுதந்திர விழாவில் பங்கேற்பதுடன், வங்கதேசத்தின் தந்தை என்றழைப்படும் ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவிலும் பங்கேற்கிறார்

முதல்முறையாக புதிய போயிங் ரக விமானத்தில் பயணம்செய்த மோடி

புதிய ஏர் இந்தியா விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதல் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார்.

சிசிடிவி பொருத்திய அறையில் அஞ்சல் வாக்குகளைப் பாதுகாக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

முதியோர், மாற்றுத் திறனாளிகளிடம் பெறும் அஞ்சல் வாக்குகள் வைக்கும் இடங்களைக் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி, எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் இடம் தராத வகையில் கண்காணிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநங்கைகளால் தொடங்கப்பட்டுள்ள தேநீர்க்கடை

திருநங்கைகளைத் தொழில்முனைவோர்களாக ஆக்கும் பொருட்டு பிரபல தேநீர் தூள் நிறுவனமும் சில அமைப்புகளும் இணைந்து திருநங்கைகள் டீக்கடை திறக்க உதவி செய்துள்ளனர்.

பழனிசாமி விவசாயி அல்ல, விஷவாயு - ஸ்டாலின் அதிரடி

நேற்று (மார்ச் 25) செஞ்சியில் திண்டிவனம், செஞ்சி, மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியின் மூன்று வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.

தென் தமிழ்நாட்டில் லேசான மழைக்கு வாய்ப்பு!

தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர்: திமுக வட்டச் செயலாளர் மீது வழக்குப்பதிவு

தமிழ்நாடு தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர் வைத்ததாக திமுக வட்டச்செயலாளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

’திமுக தேர்தல் அறிக்கையில் பொய்யான தகவல்’ - பெண் மீது வழக்கு

திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக பொய்யான தகவலைப் பரப்பிய பெண் மீது சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2ஆவது ஒருநாள் போட்டி: டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வுசெய்த இங்கிலாந்து

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.

சென்னையிலிருந்து உலக மக்களுக்கு ஒரு சினிமா - '99 சாங்ஸ்' பற்றி ஏ.ஆர். ரஹ்மான்

சென்னையிலிருந்து உலக மக்களுக்கு ஒரு படத்தைக் கொடுக்க வேண்டும் என '99 சாங்ஸ்' படத்தை உருவாக்க நினைத்தது குறித்து, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details