தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்

By

Published : Mar 15, 2021, 2:59 PM IST

1.வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான இரு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றம்

மதுரை: வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக்கோரிய இரண்டு வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

2.'அதிமுக தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டிற்கு பம்பர் பரிசு' - அமைச்சர் எம்.சி. சம்பத் பெருமிதம்

கடலூர்: தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த பம்பர் பரிசு அதிமுக தேர்தல் அறிக்கை என தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் புகழாரம் சூட்டியுள்ளார்.

3.'சென்ற இடங்களில் கேக், ஜூஸ், நெற்றியில் குங்குமம்' - பரப்புரையில் இறங்கி அடிக்கும் செந்தில் பாலாஜி

கரூர்: வாகனம் செல்ல முடியாத நிலையில் உள்ள இடங்களில் நடைப் பயணமாகவும்; இருசக்கர வாகனத்தில் சென்றும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்கு சேகரிப்பது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

4.அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிரான வழக்கு - சசிகலா தரப்பினர் பதில் அளிப்பதாக சிவில் நீதிமன்றத்தில் விளக்கம்

சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெறுவதா? அல்லது தொடர்ந்து நடத்துவதா? என சசிகலாவிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. 8ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சிபெற்றதாக அறிவிக்க தனியார் பள்ளிகள் எதிர்ப்பு

சென்னை: எல்கேஜி முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்கக் கூடாது என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

6.திருணமூலில் இணைந்த யஷ்வந்த் சின்ஹாவுக்கு துணைத் தலைவர் பதவி

இரண்டு நாள்களுக்கு முன் திருணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹாவுக்கு கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பு கிடைத்துள்ளது.

7.பத்ம பூஷண் விருது பெற்ற ஓவியர் லஷ்மன் பாய் காலமானார்

பத்ம விருது பெற்ற கோவாவின் பிரபல ஓவியர் லஷ்மன் பாய் 95 வயதில் காலமானார்.

8.திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

திருப்பூர்: நூல் விலை உயர்வு, பருத்தி ஏற்றுமதி தடை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் பின்னலாடை, அதன் சார்பு நிறுவனங்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.

9.ராணுவ ஆட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கும் மியான்மர்: மேலும் 38 பேர் கொலை

மியான்மரில் ராணுவ அத்துமீறலுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துவரும் நிலையில், நேற்று (மார்ச் 15) மேலும் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

10. ஆடைகளைப் பராமரிக்க அலமாரியையும் சற்று கவனியுங்கள்

பெரும்பாலான நேரங்களில் நாம் அலமாரியில் உள்ள பொருள்களைச் சுத்தம் செய்வதில் கவனம் செலுத்துவோமே தவிர அலமாரியைச் சுத்தம் செய்வதில் ஆர்வம் காட்டாமல் இருப்போம். ஆனால், அலமாரியைச் சுத்தம் செய்வதன் மூலம்தான் சுத்தமான ஆடைகளைப் பாதுகாக்க முடியும்.

ABOUT THE AUTHOR

...view details