தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 3 PM - ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கம்...

top-10-news-at-3-pm
top-10-news-at-3-pm

By

Published : Feb 14, 2021, 7:14 PM IST

1.மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி - முதலமைச்சர் பழனிசாமி

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி என நேரு உள்விளையாட்டு அரங்கில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2.இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி அடுத்த விஜயபுரம் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3.ஆப்கான் குண்டுவெடிப்பில் 30 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 30 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

4.மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: கரூரில் பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாம்!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி பிப்ரவரி 21ஆம் தேதி கரூரில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

5.மகளுக்குத் தேர்தலில் வாக்களித்த அடித்த நொடியே இறந்த தந்தை!

அமராவதி(ஆந்திரா): பஞ்சாயத்துத் தேர்தலில் மகளுக்கு வாக்களித்த தந்தை, வாக்குச்சாவடி அருகே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

6. நிவர், புரெவி புயல்களின் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.286.91 கோடி கூடுதல் நிதியுதவி

நிவர், புரெவி புயல்களின் பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டிற்கு ரூ.286.91 கோடி கூடுதல் நிதியுதவியை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர் மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

7.தேனி 18ஆம் கால்வாய் பகுதியை நவீனப்படுத்தும் பணி தொடக்கம்!

தேனி: 18ஆம் கால்வாய் பகுதிகளை ரூ.59.10 கோடி மதிப்பில் நவீனப்படுத்தும் பணியினை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்ததையடுத்து, ஜீரோ பாயிண்ட் பகுதியில் கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் தலைமையில் விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

8.விஷாலின் சக்ரா பட ட்ரெய்லர் வெளியீடு - ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்தின் இந்தி ட்ரெய்லர் வெளியாகிள்ளது.

9. அம்மா மினி கிளினிக் திறப்பு விழா: சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்பு

பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் கிராமத்தில், சுகாதாரத்துறை சார்பில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.

10. 2ஆவது டெஸ்ட்: பந்துவீச்சில் அசத்தும் இந்தியா; திணறும் இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details