தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3pm

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-3 pm
top-10-news-at-3 pm

By

Published : Sep 16, 2020, 3:23 PM IST

  • வேதா நிலையம்: ஆளுநர் பிறப்பித்த அவசர சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை கையகப்படுத்தி, தமிழ்நாடு ஆளுநர் பிறப்பித்த அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தீபக் வழக்கு. ஆளுநரின் செயலாளர், தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலாளர், இயக்குனர், சட்ட துறைச் செயலாளர் ஆறு வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

  • அண்ணா சுரங்கப்பாதை புதுப்பிப்பு!

சென்னை: அண்ணாசாலையில் உள்ள அண்ணா சுரங்கப்பாதை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

  • லண்டனில் கண்டுபிடிக்கப்பட்ட அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் ஆலைய சிலைகள்!

நாகை: அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் ஆலையத்திலிருந்து திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதை ஆகியோரின் ஐம்பொன் சிலைகள் லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சிலைகளை தமிழ்நாட்டிற்கு மீட்டுவரும் முயற்சியில் இந்திய தொல்லியல் துறை அலுவலர்கள் தீவிரம் காட்டிவருகின்றனர்.

  • ராஜஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து - அதிர்ச்சி அளிக்கும் காணொலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சம்பல் நதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

  • இந்தியாவில் 50 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு!

டெல்லி: நேற்று மட்டும் 90 ஆயிரத்து 123 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்து 20 ஆயிரத்து 359ஆக உயர்ந்துள்ளது‌.

  • இதுதான் உண்மையான போதை - கங்கனா ரணாவத்

டெல்லி : மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பியுள்ள கங்கனா ரணாவத், ’இது தான் உண்மையான போதை’ என ட்வீட் செய்துள்ளார்.

  • மதுரையில் 587 கிலோ புகையிலை பொருள்களுடன் ஒருவர் கைது!

மதுரை: தெற்குவாசல் பகுதியில் 587 கிலோ புகையிலை பொருள்கள் வைத்திருந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

  • மைதானத்தில் நிறவெறி குறித்த விமர்சனம்! - எதிரணி வீரரை அடித்த நெய்மர்

பாரிஸ் : கால்பந்து போட்டியின்போது எதிரணி வீரர் நிறவெறி குறித்த இழிசொல்லைப் பயன்படுத்தியதாலேயே அவரை அடித்ததாக நெய்மர் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற கடற்படை வீரரை தாக்கியவருக்கு பிணை!

ஓய்வுபெற்ற கடற்படை வீரரை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு மும்பை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கரூரில் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கரூர்: கரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

ABOUT THE AUTHOR

...view details