தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 1PM - etv bharat news

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்தி சுருக்கம் இதோ...

1PM
1PM

By

Published : May 1, 2021, 12:51 PM IST

1. பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்குத் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்!

ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு இரண்டாம் போகம் பாசனத்திற்காகத் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

2.கரூரில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்!

கரூர் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

3.கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கு - ஜூன் விசாரணை!

வல்லுநர்களையும், ஆன்மிகவாதிகளையும் கொண்டசிறப்பு குழு அமைத்து, கோவில் சடங்கு சம்பிரதாயங்களை கோவில் நிர்வாகம் முறையாய் கடைப்பிடிக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். பக்தர்களிடம் கோவில் நிர்வாகப் பொறுப்பை வழங்கத் தேவையானவற்றை ஆய்வு செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்கக வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

4.கொடைக்கானலில் சுற்றுலாவை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம்?

திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாவை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்வி குறியாகி உள்ளது.

5.130 கோடி மக்களுடன் மூழ்கிவரும் படகு - ப. சிதம்பரம் விமர்சனம்

கோவிட் நிலைமையை சரியாகக் கையாளவில்லை என்ற தொனியில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் இன்று மத்திய அரசைத் தாக்கி, '30 கோடி மக்களுடன் படகு மூழ்கிவருகிறது' என்று விமர்சனம் செய்துள்ளார்.

6.புதுச்சேரியில் மலிவு விலையில் உணவு: தமிழிசை தொடங்கிவைப்பு

புதுச்சேரி: மலிவு விலையில் உணவு வழங்கும் திட்டத்தை புதுச்சேரியில் அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

7.டொரண்டோவில் தமிழ் இருக்கை உறுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ. 17.1 கோடி ஆகும் என கணக்கிடப்பட்டது. இதற்கான நிதி திரட்டும் பணியில் தமிழ் இருக்கை அமைப்பும், கனடிய தமிழர் பேரவையும் இணைந்து செயல்பட்டதன் விளைவாக இது சாத்தியமாகியுள்ளது.

8.காவல் துறையினரிடம் சிக்கிய காதல் ஜோடி

சென்னை: வீட்டிற்குத் தெரியாமல் அகர்தலாவிலிருந்து சென்னை வந்த காதல் ஜோடி விமான நிலைய காவல் துறையினரிடம் சிக்கியது.

9.கள்ளச்சந்தையில் அதிகரிக்கும் ரெம்டெசிவிர் விற்பனை: இருவர் கைது!

சென்னை: பல்லாவரத்தில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனைசெய்த மருத்துவர் உள்பட இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

10.ரூ.8,873.6 கோடி வழங்கிய எஸ்.டி.ஆர்.எஃப்.!

டெல்லி: 2021-22ஆம் ஆண்டிற்கான மாநிலப் பேரிடர் மறுமொழி நிதியத்தின் (எஸ்.டி.ஆர்.எஃப்.) மத்திய பங்கின் முதல் தவணையாக ரூ.8,873.6 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details