தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 1PM - மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்தி சுருக்கம் இதோ..

Top 10 news @ 1PM
Top 10 news @ 1PM

By

Published : Mar 25, 2021, 1:09 PM IST

’தாலிக்கு தங்கம் முதல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வரை’ - 'அம்மா' பெயரைச் சொல்லி ஓபிஎஸ் பரப்புரை

சேலம்: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் விவரம்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் விவரங்களை கீழே 'கிளிக்' செய்து காணலாம்.

என் மீதான குற்றச்சாட்டுகளை விசாரியுங்கள்- உத்தவ் தாக்கரேவுக்கு, அனில் தேஷ்முக் கடிதம்!

“என் மீதான குற்றச்சாட்டுகளை விசாரியுங்கள்” என முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கடிதம் வாயிலாக கூறியுள்ளார்.

அடிப்படையே சரியில்லாதபோது மற்றவற்றை எப்படி சிந்திப்பது? திருநெல்வேலி திமுக வேட்பாளருடன் ஒரு நேர்காணல்...

தனது தொகுதியில் அடிப்படைக் கட்டமைப்பே சரியில்லாதபோது பிற முக்கியத் திட்டங்கள் குறித்து எப்படி திட்டமிடுவது என திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க ஆர்பிஐ ஆலோசனை!

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பாக மத்திய அரசுடன் ஆர்பிஐ ஆலோசனை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

’அணுகுண்டு மேலே அமர்வதும் அணு உலை அருகில் குடியிருப்பதும் ஒன்றே’ - சீமான் பேச்சு

செங்கல்பட்டு : திருப்போரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசிய சீமான், “அணுகுண்டு மேலே அமர்வதும், அணுஉலை அருகில் குடியிருப்பதும் ஒன்றே” எனக் கூறினார்.

சேலம் மாநகரத்தை குழந்தைகள் நேய மாநகரமாக மாற்ற முயற்சி!

சேலம்: சேலம் மாநகரத்தை குழந்தைகள் நேய மாநகரமாக மாற்றும் முயற்சியாக குழந்தை நேய சேலம் தொண்டு நிறுவனம் சார்பாக குழந்தை கல்வி, பாதுகாப்பு தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.

இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஷ் ஐயர் நீக்கம்

இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஷ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

’அதிமுக ஏராளமான ஊழல்களையும் குற்றங்களையும் செய்துள்ளது’ - கே. எஸ். அழகிரி

கள்ளக்குறிச்சி: அதிமுக ஆட்சியில் மாநிலத்தில் எந்த ஒரு மாற்றமும் முன்னேற்றமும் இல்லை என்றும் அதிமுக ஏராளமான தவறுகளையும் ஊழல்களையும் குற்றங்களையும் செய்துள்ளது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி பரப்புரையின்போது தெரிவித்தார்.

ஏ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

திமுக எம்எல்ஏ ஏ.வ. வேலுவுக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

ABOUT THE AUTHOR

...view details