தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM - மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ..

Top 10 news @1pm
Top 10 news @1pm

By

Published : Mar 22, 2021, 1:08 PM IST

கோவிட்-19 நிலவரம்: ஒரே நாளில் 46,951 பேருக்கு பாதிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் 46 ஆயிரத்து 951 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 212 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

வாக்காளர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்துவரும் அதிமுக வேட்பாளர்!

கரூர்: கிருஷ்ணராயபுரம் தனித் தொகுதியின் வாக்காளர்களின் கால்களில் விழுந்து அதிமுக வேட்பாளர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழ்நாட்டை அதிமுக உருவாக்கியது

கரூர்: நீர் மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தி தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத மாநிலமாக உருவாக்கியது அதிமுக அரசு என அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரையின்போது பேசினார்.

இளம்பெண்ணுக்கு ஆபாச படம், காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு!

செல்போனில் இளம்பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பியதாக காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சியில் வாக்கு சேகரித்த பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை

கரூர்: அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
குஜராத்தில் 39 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு!

குஜராத் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 39 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள் யார்?

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப் பல கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இச்சூழலில் இன்று (மார்ச்.22) வேட்புமனு பரிசீலனையின் கடைசி நாள் என்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த இறுதிப் பட்டியலை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரப்புரைக்குச் சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் அமமுகவினர் அட்ராசிட்டி

தூத்துக்குடி: பரப்புரைக்குச் சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூவின் காரை மறித்து, அமமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து ரகளையில் ஈடுபட்டனர்.

திகார் சிறைச்சாலை கைதிகளை கொல்ல ஐஎஸ் பயங்கரவாதிகள் சதி?

டெல்லி கலவரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிலரை கொல்ல ஐஎஸ் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதியில்லை'- உத்தரகண்ட் கோயிலில் வைக்கப்பட்ட பதாகைகளால் பரபரப்பு!

இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதியில்லை என்று உத்தரகண்ட்டில் உள்ள கோயில்களுக்கு முன்பாக வைக்கப்பட்ட பதாகைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details