தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிற்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - chennai district news

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

1 மணி செய்திச்சுருக்கம்
1 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jan 19, 2021, 1:17 PM IST

1 சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை: பழனிசாமி உறுதி

டெல்லி: சிறையிலிருந்து வந்த பிறகு சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

2 மருத்துவர் சாந்தா மறைவு: முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்பட தலைவர்கள் இரங்கல்

சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவரான மருத்துவர் சாந்தா மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

3 ‘அப்பாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்து நலமாக இருக்கிறார்’ -கமல் ஹாசன் மகள்களின் அறிக்கை

சென்னை: அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது, நலமாக இருக்கிறார் என கமல் ஹாசன் மகள்கள் தெரிவித்துள்ளனர்.

4 மாணவர்களுக்கான விழிப்புணர்வு வீடியோ!

தமிழ்நாட்டில் 10 மாத ஊரடங்கிற்கு பிறகு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (ஜனவரி 19) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிக்கு வரும்போது மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

5 எம்.டெக் மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஏழாம் வகுப்பு படித்தவர்!

ஏழாம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும், எம்.டெக் மாணவர்களுக்கு பாடம் கற்பித்துவருகிறார் பத்மாகர். அது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்புபவர்கள், அவரைச் சந்திக்க வேண்டும். வாருங்கள் பார்ப்போம்.

6 தென்னாப்பிரிக்கா பறக்கும் வலிமை படக்குழு!

சண்டைக்காட்சி எடுப்பதற்காக வலிமை படக்குழு தென்னாப்பிரிக்கா பறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

7 வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரிக்க ரஜினிகாந்த் கோரிக்கை!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நிகழ்வு தொடர்பாக வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணையில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

8 'திமுக ஆட்சி அமைந்த 3 மாதங்களில் மக்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு’ - மகேஷ் எம்எல்ஏ

திருச்சி: மக்கள் கிராம சபை கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு திமுக ஆட்சி அமைந்த மூன்று மாதங்களில் தீர்வு காணப்படும் என்று எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்தார்.

9 வாய்க்காலில் முறையாக தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

திருப்பூர்: காங்கேயம் அடுத்த வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து சுற்றுபுற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

10 கொடைக்கான‌லில் உறை ப‌னி சீச‌ன் தொடக்கம்

திண்டுக்கல்: கொடைக்கான‌லில் உறை ப‌னி சீச‌ன் தொடங்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details