தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM
1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

By

Published : Oct 5, 2020, 1:03 PM IST

1.அதிகரிக்கும் கரோனா பரிசோதனைகள்: சென்னை நிலவரம்?

சென்னை: கரோனா பெருந்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதன் பரிசோதனைகளை மாநகராட்சி அதிகரித்து வருகிறது.

2. 25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்டர் கிரவுண்ட் மெட்ரோ ஸ்டேஷன் திறப்பு!

கொல்கத்தா: கிழக்கு - மேற்குப் பகுதிகளை இணைக்கும் முதல் அண்டர் கிரவுண்ட் மெட்ரோ ரயில் நிலையத்தை ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்தார்.

3.பிகார் தேர்தல்: தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்ட திருநங்கை!

மோனிகா தாஸ் எனும் திருநங்கையை பாட்னாவில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தின் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமித்துள்ளது, தேர்தல் ஆணையம்.

4.அத்தியாவசியப் பணியாளர்களுக்கான புறநகர் ரயில் சேவை தொடக்கம்!

சென்னை: அத்தியாவசியப் பணியாளர்களுக்கான புறநகர் ரயில் சேவை இன்று (அக்.05) முதல் தொடங்கப்பட்டது.

5. பெண்களுக்கெதிரான குற்ற வழக்கில் போலீசார் திறமையுடன் செயல்பட உத்தரவு!

லக்னோ: பெண்கள், சிறுமிகள் மற்றும் பட்டியலின பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்பான குற்ற வழக்குகளில் மாநில காவல் துறை திறமையாக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.

6. ஹத்ராஸ் விவகாரம்: பீம் ஆர்மி தலைவர் மீது வழக்குப்பதிவு

விதிமுறைகளை மீறியதாகக் கூறி ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்தைச் சந்தித்த பீம் ஆர்மி கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவுசெய்யப்பட்டுள்ளது.

7.தங்கம் தென்னரசு தாயார் மறைவு - தலைவர்கள் நேரில் அஞ்சலி

விருதுநகர்: உடல்நலக்குறைவால் காலமான முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தாயாரின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

8. பொறியியல் படிப்பில் சேர சிறப்புப் பிரிவினருக்கான தற்காலிக ஒதுக்கீடு இன்று வெளியீடு

சென்னை: பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்த சிறப்புப் பிரிவினர் மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு இன்று(அக்.05) வெளியிடப்படுகிறது.

9.பிகார் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு?

டெல்லி: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை அக்கட்சி தலைமை இன்று வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

10. க/பெ.ரணசிங்கம் படத்திற்கு பாராட்டு தெரிவித்த சூர்யா

சென்னை: விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details