தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - top-10-news-at-1pm

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM
1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

By

Published : Sep 4, 2020, 1:36 PM IST

1. 'காந்தி குடும்பத்தில் இருந்து ஒருவர் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும்'

டெல்லி : காந்தி குடும்பத்திலிருந்து ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் மணிசங்கர் அய்யர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

2. இந்தியாவில் 39 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

டெல்லி : கரோனா தொற்றால் பாதிகக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 லட்சத்தைக் கடந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

3. பிரபல கன்னட நடிகை வீட்டில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிரடி சோதனை!

பெங்களூரு : பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணைக்காக இன்று (செப்.04) மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு (சிசிபி) அழைத்துச் செல்லப்பட்டார்.

4. நகரங்களைவிட கிராமங்களில் வேகமெடுக்கும் கரோனா பரவல்!

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் கோவிட்-19 நகர்புறங்களைவிட கிராம புறங்களில் அதிவேகமாக பரவிவருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று துறை சார்ந்த வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

5. முசோரி கன் ஹில் - வரலாற்று சிறப்புமிக்க இடம் ஒரு பார்வை

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள முசோரியின் வரலாற்று சிறப்புமிக்க துப்பாக்கி மலை பற்றி விவரிக்கிறது இக்காணொலி...

6. கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேனா? - விஜய் வசந்த் விளக்கம்!

குமரி : கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.வசந்தகுமார், உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனது அப்பாவின் பணிகளைத் தொடரவுள்ளதாக அவரது மகனும், நடிகருமான விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

7. புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்வதற்கு 7 பேர் குழு - தமிழ்நாடு அரசு ஆணை!

சென்னை: புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

8. ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சனுக்கு கரோனா!

வாஷிங்டன் : ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சனுக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, தி பேட்மேன் திரைப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

9. உலக அளவில் ஒரே நாளில் 2 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு கரோனா!

உலக அளவில் நேற்று (செப்.03) ஒரே நாளில் இரண்டு லட்சத்து 94 ஆயிரத்து 115 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10. 'கரோனா வைரஸ் எதிர்பாராதது; நாட்டின் பின்னடைவு'- பிரதமர் நரேந்திர மோடி

கரோனா வைரஸ் தொற்று எதிர்பாராதது, நாட்டின் பின்னடைவு, இது சுகாதாரம் மற்றும் பொருளாதார அமைப்புகளை சோதித்து வருகின்ற போதிலும், நாட்டு மக்களின் விருப்பங்களை பாதிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details