தமிழ்நாடு

tamil nadu

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

By

Published : Jun 25, 2020, 1:10 PM IST

Published : Jun 25, 2020, 1:10 PM IST

Updated : Jun 25, 2020, 1:19 PM IST

top-10-news-at-1pm
top-10-news-at-1pm

பெட்ரோல்-டீசல் யுத்தம்: 80 ரூபாயைக் கடந்து டீசல் உச்சம்!

டெல்லி: இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 79.92 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 80.02 ரூபாக்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

மருத்துவம், பொறியியலில் சேர முடியாதபடி சதி: வைகோ கண்டனம்

சென்னை: தமிழ்நாடு அரசு 11ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை மாற்றும் அறிவிப்பைக் கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

எல்லைப் பிரச்னை எதிரொலி: சீனப் பொருள்களைப் புறக்கணிக்கத் தயாராகும் சென்னை

சென்னை: கல்வான் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் தமிழ்நாட்டு வீரர் உள்பட 20 இந்திய ராணுவத்தினர் வீர மரணமடைந்தனர். இதன் தாக்கம் காரணமாக சீனப் பொருள்கள் புறக்கணிப்பு முழக்கம் நாடு முழுவதும் எழுந்துள்ளது.

ஊரடங்கு மீறல்: ரூ.15 கோடியை தாண்டிய அபராதம்

சென்னை: அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை மீறியதாக சென்னையில் தற்போதுவரை ஏழு லட்சத்து 23 ஆயிரத்து 920 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 15 கோடியே 17 லட்சத்து 94 ஆயிரத்து 685 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்னைக்கு தீர்வுகாண்க - பிரிட்டன் பிரதமர்

லண்டன்: இந்தியா-சீனா தங்களுக்கிடையேயான எல்லைப் பிரச்னையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுறுத்தியுள்ளார்.

மீண்டும் கல்வானுக்குத் திரும்பிய சீனப் படை!

டெல்லி : இந்திய-சீன படையினர் இடையே ஜூன் 15ஆம் தேதி பயங்கர மோதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு, சீன ராணுவத்தினர் மீண்டும் திரும்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுஷாந்தின் உடற்கூறாய்வு அறிக்கை வெளியானது

நடிகர் சுஷாந்து சிங் ராஜ்புட் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அவரது இறுதி உடற்கூறு ஆய்வு அறிக்கையை மருத்துவக் குழு மும்பை காவல் துறையிடம் ஒப்படைத்தது.

மேட்ச் ஃபிக்ஸிங்கிற்கு எதிரான சட்டம் இந்தியாவில் முக்கிய மாற்றமாக இருக்கும்: ஐசிசி

மேட்ச் ஃபிக்ஸிங்கிற்கு எதிராக இந்தியாவில் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது கிரிக்கெட்டின் முக்கிய மாற்றமாக இருக்கும் என ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ஷாப்பிங் - எச்சரிக்கை தேவை!

மும்பை: ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களைக் குறிவைக்கும் சைபர் ஹேக்கர்கள், அவர்களிடமிருந்து வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களைத் திருடுவது ஊரடங்கு காலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

உலகில் 94 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

ஹைதராபாத்: உலகம் முழுவதும் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் 93 லட்சத்து 45 ஆயிரத்து 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு லட்சத்து 78 ஆயிரத்து 949 பேர் உயிரிழந்துள்ளனர்.

Last Updated : Jun 25, 2020, 1:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details