தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-1pm
top-10-news-at-1pm

By

Published : Jun 17, 2020, 1:08 PM IST

முதலமைச்சர் அலுவலக தனிச்செயலர் கரோனாவால் உயிரிழப்பு!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அலுவலக தனிச்செயலர் தாமோதரன் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஊரடங்கால் தேர்வினைத் தவறவிட்ட 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுவாய்ப்பு

சென்னை: மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற 12ஆம் வகுப்புத் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.

பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

டெல்லி: தெலங்கானாவில் ஒன்பது வயது குழந்தையை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கொலைசெய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கரோனா: மருத்துவச் சோதனையை விரிவுபடுத்த கர்நாடகா திட்டம்!

பெங்களூரு: ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் கோவிட் சோதனையை விரைவுப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார்.

சீனப் பொருள்களை புறக்கணிப்போம் - வர்த்தக் கூட்டமைப்பு போர்க்கொடி

டெல்லி: இந்தியா - சீனா இடையே மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், சீனாவின் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு போர்க்கொடித் தூக்கியுள்ளது.

இந்தியாவில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் சீனா!

மும்பை: இந்தியா- சீனா இடையே போர்ப்பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், சீனாவைச் சேர்ந்த மூன்று முன்னணி நிறுவனங்கள் மகாராஷ்டிராவில் ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் : மனிதர்கள் மீது பரிசோதிக்கப்படவுள்ள புதிய கோவிட்-19 தடுப்பு மருந்து!

லண்டன்: இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்ட புதிய கோவிட்-19 தடுப்பு மருந்து, இந்த வாரம் மனிதர்கள் மீது பரிசோதிக்கப்படவுள்ளது.

பார்வையாளர்கள் இல்லாமல் யூஎஸ் ஓப்பன் தொடர்: நியூயார்க் ஆளுநர் அறிவிப்பு

நியூயார்க்: யூஎஸ் ஓப்பன் டென்னிஸ் தொடர் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 13ஆம் தேதிவரை பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என நியூயார்க் ஆளுநர் அறிவித்துள்ளார்.

தனி நபர் நிதி நிர்வாகத்தில் தற்சார்பை உறுதிசெய்வது எப்படி? - சிறப்புக் கட்டுரை

இன்றைய சூழலில் ஒரு தனிநபர், நிதி நிர்வாகத்தின் மூலம் தற்சார்பு நிலையை அடைவது எப்படி என நிதித் துறை வல்லுநர் குமார் சங்கர் ராய் எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

மீண்டும் திறக்கப்படும் காதலின் சின்னம்!

பாரிஸ்: கரோனா பரவல் காரணமாக சுமார் இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த ஈபிள் கோபுரம் வரும் ஜூன் 25ஆம் தேதிமுதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details