தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - etv bharat tamil latest news

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 1pm
Top 10 news @ 1pm

By

Published : Jun 15, 2020, 1:28 PM IST

பிரதமருக்கு பஞ்சாப் முதலமைச்சர் கடிதம்!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு, பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் பிரதம மந்திரி காரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

எளிமையாக நடைபெற்ற கேரள முதலமைச்சர் வீட்டு திருமணம்

திருவனந்தபுரம்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடைய மகளின் திருமணம் வீட்டிலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.

நீட் தேர்வு மீண்டும் தள்ளிவைக்க வாய்ப்பு

சென்னை: மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீடு கோரிய வழக்கு: நாளை விசாரணை

சென்னை: மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரிய வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

'அரசின் பொறுப்பின்மையால் கரோனா பாதிப்பு அதிகரிப்பு' - மு.க. ஸ்டாலின்

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழ்நாடு அரசுக்கு ஐந்து கேள்விகளை முன்வைத்தார். இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிடில் திமுக நீதிமன்றத்தை நாடும் என்றும் அவர் அரசை எச்சரித்தார்.

ஊரடங்கை ரத்து செய்யக்கோரிய வழக்கில் புதனன்று விசாரணை

சென்னை: நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கில் வரும் புதன்கிழமை விரிவான விசாரணை நடத்தி பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மீண்டும் வெளியீட்டு தேதியை மாற்றிய 'ஜேம்ஸ் பாண்ட்' படக்குழு- ஒரு முடிவுக்கு வாங்கப்பா

ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 'நோ டைம் டு டை' திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பேங்கிங் சேனலாக உருவெடுக்கும் வாட்ஸ்அப்!

டெல்லி : 'பேடி எம்', 'கூகுள் பே' போன்று 'வாட்ஸ்அப் பே' எப்போது வேண்டுமானலும் வெளியாகலாம் என்ற பேச்சுகள் எழுந்த நிலையில், வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவை அளிப்பதை வங்கிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

ஆஸ்திரேலியாவில் காலனி ஆதிக்கவாத சிலைகள் சூறையாடல்!

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் நிறவெறிக்கு எதிரான போராட்டக்காரர்கள் காலனி ஆதிக்கவாதியான ஜேம்ஸ் கூக்கின் சிலைகளைச் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்டும் வறுமை: 120 வயது தாயை கட்டிலுடன் வங்கிக்கு இழுத்துச் சென்ற மகள்

புவனேஸ்வர்: கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பெண் ஒருவர் தனது தாயின் வங்கிக் கணக்கில் உள்ள 1500 ரூபாயை எடுப்பதற்காக அவரை கட்டிலுடன் வைத்து வங்கிக்கு இழுத்துச் சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details