தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1 pm - இந்தியா

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்

1 pm
1 pm

By

Published : Sep 15, 2020, 1:42 PM IST

ஐ.நா பெண்கள் நிலை ஆணையத்தின் உறுப்பினரான இந்தியா!

வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் ஒரு அமைப்பான மகளிர் நிலை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

'சூர்யா கூறியதில் தவறு இல்லை, அவமதிப்பு வழக்கு பதிய வேண்டாம்' - சமூக ஆர்வலர் சரவணன்

சென்னை: கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வில் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்துள்ளார். அதேநேரம், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு பதிய வேண்டாம் என சமூக ஆர்வலர் சரவணன் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு மனு அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள்!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றி வருகிறார்.

2021இல் சசிகலா விடுதலை - சிறைத்துறை

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதை பொருள் வழக்கு: ராகினி திவேதிக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு!

பெங்களூர்: போதை பொருள் மாபியா கும்பலுடன் தொடர்பிலிருந்த நடிகை ராகினி திவேதி உள்பட ஐந்து பேரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க நகர நீதிமன்றம் உத்தரவிட்டது.

அறிஞர் அண்ணா சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை!

புதுச்சேரி: அறிஞர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

புல்வாமாவில் என்கவுன்ட்டர்; 3 பயங்கரவாதிகள் சிக்கினர்?

ஜம்மு: தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் 9 லட்சத்து 32 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழப்பு!

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒன்பது லட்சத்து 32 ஆயிரத்து 395ஆக அதிகரித்துள்ளது.

ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளுக்கு சமந்தா ஆறுதல்!

சென்னை: போதைப் பொருள் பட்டியலில் தவறுதலாக இடம் பெற்ற ரகுல் ப்ரீத் சிங்க்கு சமந்தா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் பூத்த குறிஞ்சி மலர்...மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!

உதகையிலிருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் தன்மை கொண்டவை ஆகும். இதனை சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details